வெளியானது ஜோதிகா-ன் `காற்றின் மொழி` படத்தின் ரிலீஸ் தேதி!
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் `காற்றின் மொழி`. இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்து வரும் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்து வரும் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது.
நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் "தும்ஹாரி சுலு". திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் RJ-வாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்த படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார்.
நல்ல வரவேற்பினை பெற்ற இத்திரைப்படத்தினை தமிழில் இயக்க திட்டமிடப்பட்டது. இப்படத்தினை இயக்குனர் ராதாமோகன் இயக்க நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இவரது கணவராக இந்த படத்தில் நடிகர் வித்தார்த் நடித்துள்ளார். இவர்களை தவிர இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன், மோகன்ராம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து. மேலும் இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.