நடிகை அமலாபால் தனது விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது, 'அதோ அந்தப் பறவை போல' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற உணர்சிகரமான பாடலாக அமைந்த 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' பாடலின் முதல் வரியை தலைப்பாக கொண்ட இந்தப் படத்தில் கதாநாயகியை முதன்மைப் படுத்தும் கதாபாத்திரம் ஏற்றுள்ளார் அமலாபால்.    


கே.ஆர்.வினோத் இயக்கவுள்ள படம் ஜங்கிள் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இதற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘சென்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


நேற்று (வியாழக்கிழமையன்று) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகை அமலா பாலின் நெருங்கிய தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருந்தார்.


முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு இருந்த நடிகை காஜல் அகர்வால் தன் டிவிட்டர் பக்கத்தில் நடிகை அமலா பால் குறித்து கருத்து தெரிவித்து போஸ்டரை வெளியிட்டார். அதில், "பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால்" அதோ அந்த பறவை போல, படத்தின் முதல் பார்வை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், படம் திரைக்கு வரும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்றும் நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்ட தன் நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.


 



 


இதற்கு பதிலளித்த நடிகை அமலா பால், காஜல் அகர்வாலுக்கு தனது மனமார்ந்த நன்றி. அவர் ஒரு தலைசிறந்த நடிகை என்றும், தனது பணியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் சகநடிகையான அமலா பாலை பேரழகி என கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.