சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்கிய சினேகாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் ம.ஆ.சிநேகா. திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், பல ஆண்டுகளுக்குப் பின்னர் போராட்டத்தில் வெற்றி பெற்று தன்னை ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசின் சான்றிதழ் மூலமாகவே பெருமையுடன் பறைசாற்றி உள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக, சாதி, மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழைப் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


இந்நிலையில், சினேகாவின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!’ என்று பதிவிட்டுள்ளார்.