மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை 4 மணி - 5:30க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகும். பூஜை முடிந்த பின்னர் எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்.


காரடையான் நோன்பு தினம்:- 15-03-19
பூஜை நேரம்:- 4 மணி - 5:30க்குள்
நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)


இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. 


இந்த நோன்பில் நைவேத்தியமாக கார அரிசி மாவும், காராமணி அல்லது துவரம் கலந்த அடையும்  செய்யப்படுகிறது. 


இந்தப் பூஜையை கடைபிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பழம் சாப்பிடலாம். அதிகாலை நீராடி வீட்டை தூய்மையாக அலங்கரித்து பூஜை அறையைச் சுத்தம் செய்யவும். வாசல்களை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கவும். பூஜை அறையில்  காமாட்சி அம்மனையும்,  சுவாமிபடங்களுக்கும் பூ மாலையும்  அணிவிக்க வேண்டும்.


நோன்பு அன்று செய்த அடைகளை சிறிதேனும் மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து பசுவை வலம் வந்து வணங்க வேண்டும் என்பது ஐதிகம். அதனாலேயே விரதமன்று பால், தயிர் போன்ற பொருள்களை சாப்பிடக்கூடாது. 


பெண்களின் விரதமும் பூஜை வழிபாடும் கணவனது நலனுக்காக  எனும்போது  இந்த காரடையான் விரதம் சிறப்பான பலனை தரும்.