தனது கனவு இல்லத்தை கட்டிய அந்த நபர், தனது மனைவி கிரபிரவேச நேரத்தில் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையான காதலுக்கு ஒரு போதும் மரணமில்லை அதனால், இறந்து போன   தனது மனைவியை மறக்க முடியாத கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர், தனது மனைவி தனது கனவு வீட்டின் கிரகபிரவேசத்தில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவரது மெழுகு சிலையை அந்த வீட்டில்  அமைத்தார். 



 



2017-ல் நடந்த கார் விபத்தில், ஸ்ரீநிவாஸன் அவர்களின் மனைவி  மாதவி இறந்து விட்டார். மகளுடன் காரில் திருப்பதி சென்று கொண்டிருந்த போது,  விபத்து நேரிட்டது. அவரது மனைவி மாதவி  உயிருடன் இருந்தபோது,  பங்களா ஒன்றை கட்ட வேண்டும் என்பது மாதவியின் கனவு. எனவே இந்த வீட்டை தனது மனைவியின் நினைவாக கட்டியுள்ளார்.


கிரகபிரவேச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது இந்த உண்னையான காதல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது