தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50-வது ஆண்டு தொடங்குவதையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.  
 
கடந்த 18 ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நேரத்தில் நேற்று இரவு மருத்துவர்களும், செவிலியர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
சிறு வயது முதல் தமிழ் ஆர்வம் கொண்டு அதில் சிறந்து விளங்கிய கருணாநிதி பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் கருணாநிதி.
 
திமுகவின் முதல் தலைவராக 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50 ஆம் ஆண்டில் அவர் இன்று அடியெடுத்து வைத்து தலைவர் பொறுப்பில் பொன்விழா காணுகிறார்...
 
கருணாநிதி பொறுப்பேற்று 50-வது ஆண்டு தொடங்குவதையொட்டி ப்ளிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதை தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், எத்தனையோ காட்டாறுகள், கணக்கிலடங்கா துரோகங்கள், எதிர்கொள்ளவே முடியாத நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் அத்தனையும் கடந்து, இணையேதுமில்லா சாதனை புரிந்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் என்றைக்கும் பயணிப்போம்! என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 



மேலும், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் வைர விழா, கழகத் தலைவராய் பொன்விழா. சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி அரை நூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தியான அருமைத் தலைவரின் புகழை போற்றிப் பாதுகாப்போம்.