சர்ச்சையை ஏற்படுத்திய காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலும்.. இந்து கடவுளும்..
காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு கோயில் போலவா அல்லது ரயில் போல நடத்தப்படும்? என்ற கேள்வியும் எழுகிறது.
புது டெல்லி: காசி மகாகல் எக்ஸ்பிரஸ் (Kashi Mahakal Express) ரயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிவபெருமான் சிலையால் பெரும் சர்ச்சையை தொடங்கிவிட்டது. அந்த ரயிலின் ஐந்தாவது பெட்டியில் இருக்கை எண் 64 பெர்த் சீட் முழுவதும் சிவபெருமானுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஒருபுறம் சமூக ஊடகங்களில் விவாதங்கள் வலுப்பெற்றன. மறுபுறம் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இது அரசியல் பிரச்சனையாக மாறியது. இதற்கு பதில் அளித்த இந்திய ரயில்வே நிர்வாகம், இந்த ரயிலுக்குள் தெய்வங்களின் படங்கள் நிரந்தரமாக வைக்கப்படவில்லை. தனது முதல் பயணத்தை இன்று துவங்கி உள்ளதால், ஐ.ஆர்.சி.டி.சி பணியாளர்கள் இந்த படங்களை அங்கே வைத்துள்ளார்கள் என்று ரயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி யின் சுற்றுலா இயக்குநர் ரஜ்னி ஹசிஜா கூறுகையில், தற்போது தொடக்க ஓட்டத்திற்காக இந்த புதுமையான முயற்சி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதே நடைமுறை தொடரும் என்று தெரிவித்து உள்ளார் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படங்கள் நிரந்தரமாக எப்போதும் அங்கே இருக்காது என இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. `இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.
அதேநேரத்தில் முன்னதாக, இந்து கடவுள்கள் படங்களை குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு செய்தி நிறுவனத்தின் ட்வீட்டை மறுட்வீட் செய்து பிரதமர் அலுவலகத்திற்கு டேக் செய்து, "அரசியலமைப்பின் முகவுரையில் அனைத்து மத மக்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் தெய்வங்களின் படத்தை பொதுச் சொத்துக்களுக்குள் வெளிப்படையாக வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளப்பட்டதை குறிப்பிட்ட அசாதுதீன் ஒவைசி, இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூன்று முக்கிய ஜோதிர்லிங்கங்களை இணைக்கும் காஷி மகாகல் ரயிலை ஞாயிற்றுக்கிழமையன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) துவக்கி வைத்தார்.
காஷி மகாகல் எக்ஸ்பிரஸ் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு கர்பரேட் ரயில், இதை ஐ.ஆர்.சி.டி.சி இயக்குகிறது. இந்த ரயிலில் பக்தர்கள் மூன்று ஜோதிர்லிங்கங்களை சென்று தரிசித்து வரலாம். காசி விஸ்வநாத்தை தரிசித்த பிறகு உஜ்ஜைனின் மகாகலேஷ்வர் மற்றும் ஓம்கரேஷ்வருக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
ரயிலில் பஜனைக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவ உணவுகள் மட்டுமே இந்த ரயிலில் பரிமாறப்படும். பக்தர்களை மனதில் வைத்தே இந்த ரயில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.