Education Loan: கல்விக்கடன் எடுக்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.!
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது படிப்புக்காக கடன் வாங்க திட்டமிட்டால், சில விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இன்றைய காலத்தில் கல்விக் கடன் பெறுவது மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. கல்விக்கான செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வெளி நாடு சென்று படிப்பவர்கள் மட்டுமல்லாமல், உள்நாட்டில் தனியார் நிறுவனங்களில் பயில்பவர்களும் கல்வி கடன் பெற்று பயிலும் நிலையில் பலர் உள்ளனர். கல்விக் கடன் வாங்கும்போது, நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
பல நேரங்களில் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டால், கல்விக் கடன் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வி கட்டணம் தொடர்பாக ஏற்படும் செலவுகளுக்கு வருமான வரியில் சில விலக்கு அளிக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேர கல்விக்கான செலவுகளுக்கு பிரிவு 80 சி -யின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கல்விக்காக கடன் வாங்கினால், கடன் பெறும் இரண்டு குழந்தைகளுக்கு பிரிவு 80C இன் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த விலக்கு படிப்பிற்காக செலுத்தப்படும் கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும். எந்தவொரு தொண்டு அல்லது மேம்பாட்டிற்காக செலுத்தப்படும் கட்டணம் இந்த வகையில் சேராது.
ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!
நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது படிப்புக்காக கடன் வாங்க திட்டமிட்டால், சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். முழுநேர, பகுதி நேர அல்லது தொழிற்கல்வி படிப்புகளுக்கு கடன் வாங்கலாம். இது தவிர, பொறியியல், மேலாண்மை, மருத்துவம், ஹோட்டல் மேலாண்மை மற்றும் கட்டிடக்கலை போன்ற படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டத்திற்கும் கடன் பெறலாம். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர், இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
கல்விக்கடன் பெற தேவையான ஆவணங்கள்:
- பள்ளியில் பெற்ற மாற்றுச் சான்றிதழ் ( TC).
- 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
- மாணவரின் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்
- பெற்றோரின் வருமானச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை
- பெற்றோரின் வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஆவணங்கள்
- கல்லூரியில் சேரிக்கை தொடர்பான ஆவணங்கள்
- கல்விக் கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR