வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!

விலை மதிப்புள்ள நகை மற்றும் பிற பொருட்களை வைக்க வங்கி லாக்கரை வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2021, 09:47 AM IST
  • ரிசர்வ் வங்கி வங்கி லாக்கர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வழங்கியது
  • வங்கி லாக்கர் குறித்த புதிய விதிமுறைகள் 2022, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
  • RBI முக்கிய விதிகளை திருத்தியுள்ளது.
வங்கி லாக்கர் புதிய விதிகள்;  'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!! title=

புதுடெல்லி: விலை மதிப்புள்ள நகை மற்றும் பிற பொருட்களை வைக்க வங்கி லாக்கரில் (Bank Locker) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. வீட்டில் திருட்டு அல்லது  தீ விபத்துள்ள உள்ளிட்ட பிற காரணங்களால், நமது மதிப்புமிக்க பொருட்களை இழக்க வாய்ப்பு உள்ளதால், அது போன்ற விஷயங்களில் இருந்து பாதுகாக்க,   பலர்  வங்கி லாக்கரில் அதனை வைத்திருக்கும் பழக்கம் உள்ளது.   தற்போது ரிசர்வ் வங்கி லாக்கர் விதிகளை மாற்றியுள்ளது. 

வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ரிசர்வ் வங்கி (RBI)  வங்கி லாக்கர்கள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில், லாக்கரை நீண்ட காலத்திற்கு திறக்கவில்லை என்றால், வங்கிகள் லாக்கரை உடைத்து திறக்கலாம் என புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. லாக்கருக்கான வாடகையை முறையாக செலுத்தினாலும், நீண்ட காலம் திறக்கப்படாமல் இருக்கும் லாக்கர்களை திறக்க வங்கிகளுக்கு அனுமதி உண்டு

வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள், வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கம்  தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் திறக்கப்படாமல், செயல்படுத்தப்பட்டாமல் இருக்கும் வங்கி லாக்கர்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. 

திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் மூலம், நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாமல் இருக்கும் வங்கி லாக்கரில் உள்ளவற்றை, அதன் நியமனதாரர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவும் அல்லது பொருட்களை வெளிப்படையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாக்கர் வைத்திருப்பவர் 7 வருட காலத்திற்கு தொடர்பில் இல்லாமல் இருந்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

வங்கி லாக்கர் வைத்திருப்பருக்கு, லாக்கரை உடைக்கும் முன் தகவல் அளிக்கப்படும்.  ஒரு கடிதம் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணுக்கு  எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளும் அனுப்பப்படும். 

ALSO READ | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!

வங்கியின் அதிகாரி மற்றும் இரண்டு  சாட்சிகள் முன்னிலையில் லாக்கரைத் உடைக்க வேண்டும் என்பதோடு, முழு செயல்முறையும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மேலும் கூறுகின்றன. லாக்கரைத் உடைத்த பிறகு, வாடிக்கையாளரால் உரிமை கோரப்படும் வரை  அதில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக ஒரு சீல் செய்யப்பட்ட உறையில் வைக்கப்படும் என்று RBI மேலும் கூறியது.

இது தவிர வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு வங்கியில் தீ விபத்து அல்லது கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் அடைதல், போன்ற சமயங்களில், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் புதிய விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைபேரழிவின் காரணமாக வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது.

வங்கி லாக்கரில் அபாயகரமான பொருட்கள் மற்றும்  சட்டத்திற்குப் புறம்பான பொருட்களை வைக்கக்கூடாது. அதனை மீறினால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய விதிகள் கூறுகின்றன.

ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News