இனி குப்பைகளை கொட்டும்போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவும்!
மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என ஒவ்வொரு வகையான கழிவுகளையும் தனித்தனியே பிரித்து கொட்டுவது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது.
வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சுற்றுசூழல் மாசடையும், அதனால் அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் குப்பை கொட்டுவதில் இருக்கும் சில அடிப்படையான விஷயங்கள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. குப்பைகளில் நகராட்சி திடக்கழிவுகள், அபாயகரமான கழிவுகள் மற்றும் உயிர் மருத்துவ கழிவுகள் போன்ற பலவிதமான கழிவுகள் உள்ளன, இவற்றை தனித்தனியாக பிரித்து கொட்டுவது நமது கடமையாகும். அவ்வாறு செய்வது தூய்மை பணியாளர்களுக்கும் எளிமையாக இருப்பதோடு, சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது. இந்த நகராட்சி திடக்கழிவுகளில் மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என இரு வகையுண்டு.
மேலும் படிக்க | டிரைவிங் லைசென்சில் புதிய மாற்றம்! முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!
மட்கும் குப்பை என்றால் கெட்டுப்போன உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவையாகும். இந்த குப்பைகளை நாம் சரியாக 24 மணி நேரத்தில் குப்பை தொட்டிகளில் கொட்டிவிட வேண்டும், இல்லாவிடில் இதில் தேவையில்லாத கிருமிகள் உருவாகி நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். பிளாஸ்டிக் பொருட்களான ப்ரஷ், சீப்பு, தண்ணீர் பாட்டில்கள் மட்காத பொருட்களை தனியாக பேக் செய்து குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டும். அடுத்ததாக அபாயகரமான கழிவுகள் என்று சொல்லப்படும் சில பெயிண்ட் டப்பாக்கள், மருந்து டப்பாக்கள் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த கழிவுகளை தனியாக பேக் செய்து கொட்ட வேண்டும். ஏனெனில் அதிலுள்ள வேதிபொருட்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது, அதனால் அவற்றை தனியாக பிரித்து கொட்ட வேண்டும்.
அதேபோல பழைய மொபைல்கள், கணினி, பழைய வயர்கள் போன்ற சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் பொருட்களை இ-கழிவகள் என்று கூறுகிறோம், இத்தனையும் தனித்தனியே பிரித்து கொட்ட வேண்டும். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள், மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில்கள், பிஞ்சுகள், கட்டு காட்டும் துணிகள் போன்றவற்றை மருத்துவ கழிவுகள் என்கிறோம். இந்த கழிவுகளை கொட்டுவதற்கென்று தனியே இடம் உள்ளது, அந்த இடத்தில தான் மருத்துவ கழிவுகளை கொட்ட வேண்டும். இதுபோன்ற குப்பைகளை ஒரே இடத்தில் ஒன்றாக கொட்டிவிடாமல் ஒவ்வொரு வகையான குப்பைகளையும் தனித்தனியே பிரித்து கொட்டுவது அவசியமான ஒன்றாகும்.
மேலும் படிக்க | உலகத்தையே குப்பையாகும் கழிவுப் பொருட்கள்: அச்சத்தில் அன்னை பூமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR