சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு! இனி `NO PLASTIC`!
சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை கோயில் கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். இந்த கோவிலுக்கு பொதுவாக 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழிபட செல்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை என்ற நடைமுறையை தேவசம் கடைபிடித்து வருகிறது.
கடந்த ஜூலை 19-ம் தேதி இந்த நடவடிக்கையை சற்று மாற்றப்பட்டு ஆண்களைப்போல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சபரிமலை தேவசம் நிர்வாகம் தரப்பில் வாதம் நடைபெற்றது. அதில், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காரணமாக சபரிமலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும். மேலும் தொடர்ந்து 48 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது பெண்களால் முடியாது காரியம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா கொண்டுவர கேரள உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.