கேது பெயர்ச்சி ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரும். அதன்படி 2022ஆம் ஆண்டில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கேதுவின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கேது பெயர்ச்சியானது துலாம் ராசியில் நிகழ உள்ளார். முன்னதாக இந்த கேது பெயர்ச்சியானது விருச்சிக ராசியில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும். மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.


மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 


ரிஷபம்: கேது பெயர்ச்சியால் நீங்கள் சில சதியால் பாதிக்கப்படலாம். பொருளாதார முரண்பாடுகள் அதிகரிக்கும். சில கவலைகள் உங்களை வாட்டலாம். வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


மிதுனம்: குழந்தைகளுடன் உறவு மோசமடையலாம். பணச் செலவு அதிகரிக்கும். முடிந்தவரை உங்கள் துணையிடம் அன்பையும் அக்கறையையும் காட்ட முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் இணக்கமான உறவை பராமரிக்க அன்பு மிகவும் தேவைப்படலாம். இது தவிர, உங்களின் கற்பனைத்திறன் குறைவாகவும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதில் ஆர்வம் குறைவாகவும் இருக்கும்.


கடகம்: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். இது தவிர, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தினசரி வருமானம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.


சிம்மம்: குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவும். குடும்ப தகராறு உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நிதி ரீதியாக, உங்கள் சொத்துக்களை விற்பதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உடன்பிறந்தவர்களுடன் சுற்றுலா செல்லலாம்.


கன்னி: உத்தியோகத்தில் பணியிடத்தில் நல்ல இமேஜ் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் பெருக வாய்ப்புகள் அதிகம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். புத்தாண்டில் கவனமாக இருங்கள். குறிப்பாக பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


துலாம்:புத்தாண்டு தொடக்கத்தில் குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவும். இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டு மூலங்கள் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு வருமானத்தை கொண்டு சேர்க்கும். சொத்து சம்பந்தமான பல விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.


ALSO READ | Horoscope 2022: புத்தாண்டு ஜோதிட பலன்கள்! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்


விருச்சிகம்: பணம் சம்பாதிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு திட்டத்திலும் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இதனுடன் ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.


தனுசு: திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். பயணத்தின் போது வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையக்கூடும். எந்த ஒரு தொழிலிலும் முதலீடு செய்ய சாதகமான நேரம் இது. குடும்பத்தில் செலவு அதிகரிக்கும்.


மகரம்: பயணத்தின் போது அதிர்ஷ்டம் உங்களுக்கு வெற்றியை தரும். இதனால் திடீர் வருமானம் அதிகரிக்கும். பகைவர்களிடமிருந்து விடுபடலாம். வியாபாரத்தில் லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர, வேலை அல்லது தொழில் துறையினருக்கு கடுமையான போராட்டம் இருக்கும்.


கும்பம்: உத்யோகத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இருப்பினும், நம் திறமையால், சூழ்நிலைகளை சமாளிக்கலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளும் நன்றாக பழகுவார்கள். செல்வமும் தினசரி வருமானமும் அதிகரிக்கும்.


மீனம்: சில காரணங்களால் குடும்பத்தை விட்டு விலக நேரிடலாம். நீண்ட தூர பயணம் செல்லலாம். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் திடீர் பண இழப்பு ஏற்படலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR