Horoscope 2022: புத்தாண்டு ஜோதிட பலன்கள்! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வந்துவிடும். புத்தாண்டு ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 06:56 AM IST
  • காதலுக்கு உகந்த ஆண்டு! யாருக்கு?
  • சொத்து சேகரிக்க ஏற்ற ஆண்டு இந்த ராசிக்காரருக்கு...
  • பிரபலமாகும் ஆண்டு இது...
Horoscope 2022: புத்தாண்டு ஜோதிட பலன்கள்! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் title=

Horoscope 2022: 2021 ஆம் ஆண்டு விடைபெற்றுக் கொள்வதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. 2022 புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரவிருக்கும் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்? யாருக்கு பாதகமாக இருக்கும்? யாருக்கு மத்திமமாக இருக்கும்? 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு வீடு, தொழில், தொழில், நிதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி இருக்கும். தொழில் ரீதியாக 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு சாதுர்யத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். வீடோ அல்லது சொத்து ஏதாவதோ வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை வரும் ஆண்டில் இனிமையாக மாறுவார். 2022ல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களைப் பற்றிய உங்கள் உறவினர்களின் அணுகுமுறையும் மாறும் என்பதால், எதிர்வரும் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். 

ரிஷபம்: இந்த ஆண்டு சுக்கிரன் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார். ஆற்றலையும், உத்வேகத்தையும், கல்வியையும் தரும் புத்தாண்டு, உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். இருந்தபோதிலும், எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை காரணமாக, 2022ல் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இது, வேலை செய்பவர்களுக்கு நன்மையை கொடுக்கும். ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும்.

மிதுனம்: ஆண்டின் தொடக்கமே, வசதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும். ஆனால், மன உறுதியற்ற தன்மை மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலை ஆண்டு முழுவதும் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், செப்டம்பரில் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். முடிந்த அளவு கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 2022ஆம் ஆண்டு, காதலுக்கு ஏற்ற ஆண்டு. நவம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும் சிறந்த மாதமாக இருக்கும். புதிதாய் பிறக்கும் ஆண்டு, உங்களுக்கு மரியாதையையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் நல்ல ஆண்டு.

ALSO READ | இந்த 4 ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்: காரணம் என்ன? பரிகாரம் என்ன?

கடகம்: இந்த ராசியின் அதிபதி சூரியனும் குருவும் ஆவார்கள். 2022 நிச்சயமாக உங்கள் ஆண்டு. தொழில் வாழ்க்கையில் சக பணியாளர்கள் மற்றும் போட்டியாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இந்த வருடம் நிதி சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வீட்டிற்காக வாங்குவீர்கள். இது ஒரு சிறந்த ஆண்டு. உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் சில சிறிய மாற்றங்கள் இருக்கும். இந்த ஆண்டு குரு பகவான் உங்களை அதிக பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கம் மிக்கவராக மாற்றுவார்.

சிம்மம்: அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். ஜனவரியில் உங்கள் பொறுப்புகள் கூடும். எனவே புத்தாண்டு உங்களுக்கு பல புதிய பொறுப்புகளை கொடுக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. ஜூன் மாதத்தில் பணியிடத்தில் மாறுதல் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும். ஜூலை மாத நடுப்பகுதியில் அதற்கான வேலைகள் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பெரிய அளவில் லாபம் ஈட்டும் வாய்ப்புகளும் தென்படுகின்றன. எதிர்வரும் புத்தாண்டு, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை  கொண்டுவரும்.

கன்னி: இந்த வருடம் விஷ்ணு பகவான் உங்கள் மீது ஆசிகளைப் பொழிகிறார். இந்த ஆண்டு நீங்கள் விரும்பிய தொழில் ரீதியான முன்னேற்றங்கள் (Good for Business) மகிழ்ச்சியைத் தரும். சில முரண்பாடுகலும் ஏற்படலாம். காதல் விஷயத்தில், 2022 உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த ஆண்டு, நிதி விஷயத்திலும் நிறைவாக உணர்வீர்கள். உங்கள் தீர்மானங்களை தாமதமின்றி நிறைவேற்ற சாதகமான ஆண்டாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஆறாவது வீடு சூரியனால் சாதகமாக இருக்கும், அது நிச்சயமாக ஒரு நல்ல முடிவைக் கொண்டுவரும்.

விருச்சிகம்: ராகுவும் கேதுவும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போவதால் இந்த வருடம் சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு பலன் தரும். உங்கள் சகோதரர் மற்றும் மனைவியுடனான உறவில் கொஞ்சம் கவனம் தேவைப்படலாம். அறிவைத் தேடும் மக்களுக்கு புத்தாண்டு மிகவும் மங்களகரமாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறந்த மாதமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு காதல் கைகொடுக்கும், கை தூக்கிவிடும்.

Also Read | 2022 இந்த ஒரு ராசிக்கு ஆபத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம்

தனுசு: எதிர்வரும் புத்தாண்டு அன்பு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்குள் செவ்வாய் நுழைவதால், லக்னம் சுறுசுறுப்பாக இயங்கி, அதிர்ஷ்டத்தைத் தரும். தனுசு ராசிக்காரர்கள் 2022 முழுவதும் நிதி நிலைத்தன்மையை அனுபவிக்கலாம். இந்த வருடம் நிச்சயம் உங்களை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை ஆசீர்வதிப்பார் குருபகவான் என்றாலும், கவனக்குறைவாக இருக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

மகரம்:  2022ஆம் ஆண்டில் மகர ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நேர்மறையான ஆற்றல் (Positive Energy) உங்களுக்கு துணையாக இருக்கும். அரசு ஊழியர்களுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்டின் இரண்டாம் பாதி மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள், ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எதிர்பாராமல் காயம் ஏற்படலாம். 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சுபமான ஆண்டு. நிச்சயமாக ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையை வழிநடத்துவீர்கள்.

கும்பம்: ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும், ஆனால் பிப்ரவரியில் ஒரு சிறிய அழுத்தத்தை உணரலாம். ஆனால் பயப்பட தேவையில்லை, ஏனென்றால் மார்ச் மற்றும் ஏப்ரல் உங்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக வரும். உங்களுக்கு முற்றிலும் எதிர்மாறானவர்களுடன் உறவுகள் உருவாகும் வாய்ப்புகளும் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்கள் கனவுகளை நனவாக்கும் ஆண்டு. பொதுவாக, இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

மீனம்: எதிர்வரும் புத்தாண்டு உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். பிறருக்கு  கருணை காட்டும் உங்கள் குணத்தை சிறிது மாற்றிக் கொள்வீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, குடும்பத்தில் சற்று பதற்றம் இருக்கும். புத்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் புதிய உறவுகளை ஏற்படுத்தவும், திருமணம் செய்து கொள்ளவும் உகந்தவை. மீன ராசிக்கு இந்த ஆண்டு காதல் கைகூடும். உங்களை படைப்பாளியாக மாற்றும் ஆண்டு 2022. ஆண்டு இறுதி வரை உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். அது நல்ல பலன்களைத் தரும். 2022 ஐப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளுங்கள்

ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News