பிரான்ஸை சேர்ந்த 14 வயது திமிங்கலம், மனிதரைப் போல் ஆங்கிலம் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரன்ஸின் ஆன்டிபெட்ஸ் பகுதியில் உள்ள "மெரின்லான்ட் அக்குவாரியம்"-ல் உள்ள திமிங்கலம் தான் இத்தகைய அதியசத்தினை புரிந்துள்ளது.


ஆய்வாளர்களின் கருத்துப்படி நீர் வாழ் உயிரினங்களால், மனிதர்களைப் போல் ஹலோ, ஆமி, பை பை போன்ற வார்த்தைகளை சில பயிற்சிகளின் மூலம் உச்சரிக்க வைக்கலாம் என தெரிவித்துள்ளது.


அதைப்போல் பறவைகள் கூட மனிதரின் வார்த்தைகளை அப்படியோ மீண்டும் உச்சரிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த யானை ஒன்று மனிதரின் ஒலிகளை போல் ஒலி எழுப்பி அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.


இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த திமிங்களம் தற்போது மீண்டும் ஆச்சரியத்தினை நிகழ்த்தியுள்ளது. 


இதுகுரித்து திமிங்கலத்தின் பயிற்சியாளர் தெரிவிக்கையில், குறைகால பயிற்சிலேயே இந்த திமிங்கலம் "hello", "one, two, three," எனும் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க துவங்கியது என தெரிவித்துள்ளார்.