பண்டிகை காலம் வந்து விட்டது. பண்டிகை கால சிறப்பு தள்ளுபடிகளும் (Festive Sale) களைகட்டத் துவங்கிவிட்டன. ஈ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) முறையே அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் தங்கள் விற்பனையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் அமேசான் பல விலை பிரிவுகளில் பரந்த அளவிலான ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடியை வழங்கும். HDFC வங்கி (HDFC Bank) டெபிட் / கிரெடிட் கார்டில் கட்டணமில்லாத EMI வசதிகள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் 10 சதவீத உடனடி தள்ளுபடி ஆகியவை இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைபேசிகளின் தள்ளுபடி விலையை அமேசான் (Amazon) இன்னும் வெளியிடவில்லை. ஆனால் நிறுவனம் காண்பித்துள்ள ஒரு பகுதி விலை டேக்குகளை வைத்து நம்மால் விலைகளை ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது. அக்டோபர் 16 ஆம் தேதி Amazon.in-ல் வரப்போகும் டாப் 10 மொபைல் சலுகைகளைப் பாருங்கள்.


நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த 10 ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்


iPhone 11: iPhone 12 எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் நிலையில் இருப்பதால், Apple-ன் கடந்த ஆண்டு முதன்மை தயாரிப்பான iPhone 11, ரூ. 50,000 என்ற விலையை விட குறைவாகக் கிடைக்கக்கூடும். அதன் உண்மையான விலை ரூ. 66,300 ஆகும். ஆனால், தேவையைப் பொறுத்து விலை மாறக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.


ALSO READ: Oct 16 தொடங்குகிறது Realme Festive sale: 5000 ரூபாய் வரையிலான discounts, அற்புதமான offers


Samsung Galaxy M51: Samsung-ன் mid-ranger Galaxy M51-ன் வழக்கமான விலை ரூ. 24,999 ஆகும். இது இந்த சேலின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும். அமேசான் இதுவரை விலையை வெளியிடவில்லை. ஆனால் இது தொலைபேசியை ரூ. 2x,x99 என லிஸ்ட் செய்துள்ளது.


OnePlus 8 5G: OnePlus 8 5G, அதன் உண்மையான விலையான ரூ. 41,999-லிருந்து குறைந்து ரூ. 3x,999-க்கு விற்கப்படும் என அமேசான் குறியுள்ளது.


Samsung Galaxy S10: Galaxy S10-ன் உண்மையான விலை ரூ. 57,800 ஆகும். இந்த சேலில் இது ரூ. 39,990, அதாவது அபாரமான ரூ. 17,800 தள்ளுபடியில் கிடைக்கும்.


Redmi Note 9: பிரீமியம் தொலைபேசிகளைத் தவிர, பட்ஜெட்டை மையமாகக் கொண்ட Redmi Note 9, ரூ. 14,999-க்கு பதிலான ரூ. 1x,x99-க்கு கிடைக்கும்.


Mi 10: விற்பனையின் போது, ​​108 மெகாபிக்சல் கேமராவைக் கொண்ட சியோமியின் முதன்மை Mi 10-ஐ ரூ. xx, 999-க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்சில் ரூ. xx, 000 தள்ளுபடி மற்றும் no-cost EMI வசதியும் கிடைக்கும்.


Oppo Reno 4 Pro: Reno 4 Pro ரூ. 34,990 என்ற தள்ளுபடி விலையிலும் 9 மாதங்கள் வரையிலான no-cost EMI-யுடனும் கிடைக்கும்.


Nokia 5.3: வாடிக்கையாளர்களுக்கு Nokia 5.3-ல் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம், சேலின் போது அதன் விலை 12,999 ரூபாயாகக் குறையும்.


Samsung Galaxy M31: Galaxy M31 ரூ.1x,499 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும்.


OnePlus 7T Pro: 7T Pro வழக்கமாக ரூ. 43,999 என்ற விலையில் விற்கப்படுகின்றது. இது இந்த சேலின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும். 


ALSO READ: Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR