சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். எளிமையான இந்த விரதம் தரும் பலமும் பலன்களும் ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற விரதம். அந்த விரதத்தை மேற்கொண்டால், சகல மங்கலங்களும் கிடைக்கும். ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் நினைத்த காரியம் விரைவிலேயே கைகூடும்.


ALSO READ | Food Donoation: அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்


இந்த விரதத்திற்கு மஞ்சள்பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், சந்தனம், திரி நூல், நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், மாவிலை, பூக்கள் ஆகியவை அவசியம். இவற்றை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலை, வெல்லம். விரதத்தை வீட்டிற்குள், வீட்டுப் பூஜையறையில் வைத்து செய்வதே மிக மிக உத்தமமானது.


சந்தோஷி மாதா மந்திரம்
ஓம் ரூபாதேவி ச வித்மஹே சக்தி ரூபிணி தீமஹி  
தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்


சந்தோஷி மாதா விரத முறை
சந்தோஷிமாதா படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். படத்தின் முன் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும்.


கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த விரதத்தில் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது. இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும்.


விரதம் தொடங்கி விரதம் பூர்த்தியாகிறவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பவர்கள் புளியோ, புளிப்புப் பதார்த்தங்களோ தயிர், மோர் உள்ளிட்டவையோ கண்டிப்பாகக் உணவில் சேர்க்கக் கூடாது.


ALSO READ | தானங்களும் அவற்றின் பலன்களும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR