மற்றவர்களுக்கு உதவி செய்வது மனிதர்களின் இயல்பு. உதவி என்பது பலவிதப்படும். தேவைப்படுபவர்களுக்கு செய்வது உதவி. ஆனால், அதுவே தானம் என்பது நாம் விரும்பி மற்றவர்களுக்கு கொடுப்பது என்றாலும், இதுவும் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு வகையிலான உதவி தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோ தானம், பூ தானம், சொர்ண தானம், அன்னதானம் என தானங்கள் பலவகைப்படும். தானங்களில் சிறந்தது தானம்  அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம். 


எதைக் கொடுத்தாலும், ஒருவரின் ஆசை அடங்காது. ஆனால், உணவு என்பதை ஒரு அளவிற்கு மேல் யாராலும் சாப்பிட முடியாது. ஒருவரின் பசி பத்து கவளம் சோற்றில் அடங்கிவிடும் என்றால் அதிகப் பசியுடையவரின் பசி என்பது அதிகபட்சம் ஆயிரம் கவளமாக இருக்கலாம். ஆனால், ஒரு கட்டத்தில் போதும் என்று சொல்ல வைப்பது உணவு மட்டும் தான்.


Also Read | தானங்களும் அவற்றின் பலன்களும் 


கும்பகர்ணனாக உணவு உண்டாலும் எத்தனை அண்டா உணவை சாப்பிட முடியும்? அன்னதானம் ஒன்று மட்டுமே மனிதனின் பேராசைக்கு முடிவு கட்டும் ஒரே தானம்.
தற்போது புரட்டாசி மாதத்தில் நடைபெறும் மகாளய பட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 


பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து, நமது பல தலைமுறையினர் பசிப் பிணியினால் திண்டாடாமல் இருக்கச் செய்யலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. 


தானம் என்றாலே நினைவுக்கு வருவது கர்ணன் தான். ஆனால் அவர் எல்லாவித தானங்களை செய்தாலும் அன்னதானம் மட்டும் செய்ததில்லை என்பது புராணம் சொல்லும் கதை. பல தானங்களை செய்த கர்ணனையே பசிக்கொடுமை வாட்டியது.  


கர்ணன் இறந்த பிறகு சொர்கத்திற்கு சென்ற பிறகு அவருக்கு பசி எடுத்தது. ஆனால் சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு பசி எடுக்காது என்பது நம்பிக்கை. ஆனால் கர்ணனுக்கு பசி எடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதற்கான விடையை சொல்கிறார் தேவகுரு பிரகஸ்பதி.


READ ALSO | அன்னதானம் தெரியும், அது என்ன அன்ன தோஷம்? 


கொடைவள்ளலான கர்ணன் அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் சொர்க்கத்தில் இருந்தாலும் அவருக்கு பசி எடுத்தது. அதற்கான கர்ணனின் பசிக்கான உபாயத்தையும் சொன்னார் தேவகுரு. ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் பசித்து வந்தபோது கர்ணன் உணவு கொடுக்கவில்லை. அதற்கு காரணம் கர்ணனிடம் அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால், தன் கையை நீட்டி, அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினார் கர்ணன். 


அன்னதானம் கொடுக்கப்பட்ட இடத்திற்கு  சென்று தன் பசியை ஆற்றிக்கொண்டார் பசித்திருந்தவர். எனவே, அன்னதானம் செய்யாவிட்டாலும், தன் விரலை நீட்டி ஒருவரின் பசியைப் போக்கிய கர்ணனின் ஆள்காட்டி விரலுக்கு புண்ணியம் இருப்பதால், கர்ணன் அந்த  விரலை சுவைத்தால் பசி தீரும் என்று தேவகுரு பிரகஸ்பதி சொன்னார். அதை கேட்டு தனது விரலை வாயில் வைத்தவுடன் கர்ணனின் பசி தீர்ந்துவிட்டது.


இது அன்னதானத்தின் மகிமைக்கு உதாரணமாக காலம் காலமாக சொல்லப்படும் கதை. இது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதன்பிறகு தான் மகாளாயபட்ச அன்னதானத்தின் மகிமை கதை பலருக்கு தெரிந்திருக்காது. 


கொடை வள்ளலான கர்ணன், தான் செய்த தானங்களில் அன்னதானம் மட்டும் விட்டுபோய்விட்டதை நினைத்து வருந்தி அதை நிவர்த்தி செய்ய விரும்பினார்.
எனவே எம தர்ம ராஜனிடம் சென்று கர்ணன் ஒரு வேண்டுகோள் வைத்தார். மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி கொடுத்தால், பூமிக்கு சென்று அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்று அனுமதி கேட்டார் தானப்பிரபு கர்ணன்.


ALSO READ | குபேரனுக்கு வட்டி கட்டும் பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள்  


அதற்கு 15 நாட்கள் மட்டும் எமதர்மராஜன்  அனுமதி கொடுக்க, யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத இடத்திற்குக் வந்து அன்னதானம் செய்த பிறகு மீண்டும் சொர்கத்திற்கு செல்கிறார் கர்ணன். கர்ணனின் தானச் செயல்களால் மகிழ்ந்த எம தர்ம ராஜன், மனிதர்கள் பூலோகத்திற்கு மீண்டும் வருவது  சுகங்களை அனுபவிக்கவும், தனது இச்சைகளை பூர்த்தி செய்யவும் தான். ஆனால், அன்னதானம் செய்வதற்காக மட்டுமே பூமிக்கு வந்த கர்ணன் மட்டுமே உலகின் மிகப் பெரிய கொடைவள்ளல் என்று சொல்லும் எம தர்மன், கர்ணனுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க முன் வருகிறார்.
 
அப்போது கர்ணன் கேட்ட வரம் தான் கர்ண மகாப்பிரபு என்று அவரை உலகம் என்றென்றும் போற்றிப் புகழ வைக்கிறது. அப்படி என்ன வரம் கேட்டார் கர்ணன்?  "மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் மகாளய பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் போன்றவை சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும்" என கேட்கிறார் கர்ணன். 


கர்ணனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து எம தர்மன் கொடுத்த வரத்தின்படி, புரட்டாசி மாத மகாளய பட்சத்தில் கொடுக்கும் அன்னதானம் மிகவும் முக்கியமானது. 
கர்ணன் பூமிக்கு வந்து அன்னதானம் செய்த காலம் தான் புரட்டாசி மாத மகாளய பட்சம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிடித்தமான படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், அது நம்முடைய பல தலைமுறைக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும்  


READ ALSO | புரட்டாசி மாத பெருமாள் தரிசனத்தின் மகிமைகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR