போனில் வங்கி கணக்கு குறித்த தரவுகள்; கணக்கு உள்ள பணம் காலியாகலாம்..!!
ஹேக்கிங் மற்றும் தரவு திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் தொலைபேசியில் சிக முக்கிய தரவுகளை சேமிப்பது எவ்வளவு ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதுடெல்லி: பெரும்பாலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்குகள் தொடர்பான தரவுகள், ஆகியவற்றை தங்களது தொலைபேசி, கணினி அல்லது மின்னஞ்சலில் சேமித்து வைக்கிறார்கள். அது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏடிஎம் பின், ஆதார் அட்டை அல்லது தனிப்பட்ட தகவல்களை தொலைபேசியில் சேமிப்பதால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்.
ஊடக தளமான 'சோஷியல் சர்க்கிள்' மூலம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது, அதில் இந்தியர்கள் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைப்பதில், கவனக்குறைவான அணுகுமுறையை கடைபிடிப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம், மூன்று இந்தியர்களில் ஒருவர் தங்கள் மொபைல் போனில் கிரெடிட் கார்டு குறித்த ரகசிய தரவுகள், ஏடிஎம் பின், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு விவரங்கள், ஆதார் எண், பான் கார்டு எண் போன்ற ரகசிய தகவல்களை சேமித்து வைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, 11 சதவிகித இந்தியர்கள் தங்கள் தொலைபேசி தொடர்பு பட்டியலில் தங்கள் தனிப்பட்ட நிதித் தகவலைச் சேமிக்கிறார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களை தவிர மற்றவர்களுடன் இரகசிய கடவுச்சொற்களை பகிர்ந்து கொள்வதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. கணக்கெடுப்பில் உள்ளடங்கிய 7 சதவீதம் பேர், கிரெடிட் கார்டு சிவிவி எண், டெபிட் கார்டு எண், வங்கி கணக்கு விபரம், ஏடிஎம் கடவுச்சொல், ஆதார் அல்லது பான் எண் போன்ற முக்கிய விவரங்களை தங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.
ALSO READ | ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் வெளியீடு! பெண்களுக்கென்று பிரத்யேகமான ஸ்மார்ட்வாட்ச்!
இந்த கணக்கெடுப்பின்படி, 15 சதவிகித மக்கள் தங்கள் தகவல்களை மின்னஞ்சல் அல்லது கணினியில் சேமிக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த மக்களில் 21 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களின் அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் நினைவில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹேக்கிங் மற்றும் தரவு திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் தொலைபேசியில் சிக முக்கிய தரவுகளை சேமிப்பது எவ்வளவு ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர். பான் எண், ஆதார் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதில் நிறைய ஆபத்து உள்ளது. உங்கள் ஏடிஎம் PIN போன்ற ரகசிய தகவல்கள் திருடப்பட்டால், பல சட்டவிரோத குற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது.
எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும், அதில் தொடர்பு பட்டியல், கேமரா, செய்திகள் உள்ளிட்ட பிற செயலிகளுக்கான அணுகலுக்கு அனுமதிகளைக் கோருகின்றன என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, அணுகலை அனுமதிப்பதற்கு முன், நன்றாக யோசித்து கொடுக்கவும். உங்கள் தனிப்பட்ட தரவுகளை எங்கே, எப்படி சேமிப்பது, அதை பாதுகாப்பாக வைத்திருப்பது எபடி என்பதை அறியலாம்.
ALSO READ | சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடத்தில் வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட்போன்!
1. தகவல்களை கிளவுட் கப்யூட்டிங்கில் சேமிக்க முடியும், இதன் மூலம் ரகசிய தகவல்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். கணினி அல்லது மின்னஞ்சலுக்குப் பதிலாக உங்கள் கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றுவதே சிறந்த வழி.
2. கடவுச்சொல் மற்றும் பிற தகவல்களை தொடர்பு பட்டியலில் அல்லது தொலைபேசி குறிப்புகளில் வைப்பதற்கு பதிலாக, கிளவுட் ஸ்டோரேஜில் வைத்தால் இந்த தகவலை நீங்கள் மட்டுமே பார்க்கலாம் என்பதை இது உறுதி செய்கிறது.
3. ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், நீங்களும் அதற்கேற்ப, தொழில்நுட்பத்தில் அப்டேட் ஆவது முக்கியம். தரவின் பாதுகாப்பை உறுதி செய்ய, உங்கள் ஏடிஎம் பின் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR