உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை சாறு -ஒரு பார்வை!
உடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று கறிவேப்பிலை, இது உங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படுத்துவதில்லை. இத்தனை நாட்களாக நீங்கள் கறிவேப்பிலை பயன்படுத்தாவிட்டால், உங்கள் உடல்நலம் சிறப்பாக இன்று முதல் கறிவேப்பிலை உண்பதை துவங்குகள். எடை இழப்பு நோக்கி நாம் பயணிக்கும் போது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக இதுபோன்ற உணவுகளை நாம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு கறிவேப்பிலை ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆரோக்கியமான நார்ச்சத்தை வழங்குகிறது.
எடை குறைக்கும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை இந்திய உணவில் சேர்க்கப்டும் ஒரு அத்தியாவசிய பொருள். ஆனால் மக்கள் அவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதில்லை. உண்மையில், மக்கள் கறிவேப்பிலை சாப்பிடுவதில்லை, காரணம் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது என்று மட்டுமே நம்புகின்றனர். உணவை சாப்பிடும்போது, கறிவேப்பிலையை குப்பையாய் தூக்கி எறிகின்றனர். ஒருவேளை நீங்களும் இதைச் செய்தால், இன்று முதல் அதை நிறுத்துங்கள்.
கறிவேப்பிலை சாப்பிடுவது எப்படி?
தினசரி உணவில் கறிவேப்பிலை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். ஆனால் உணவை உண்ணும்போது அதை உண்ணக்கூடாது. மாறாக, ஒரு டீஸ்பூன் தேனை ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சாறுடன் கலந்து குடிக்கலாம்.
தேன் மற்றும் எலுமிச்சை போன்ற சோர்பெட் கலந்து கறிவேப்பிலை சாறினை குடிக்கலாம். எடை இழக்க கறிவேப்பிலை உட்கொள்ளும் போதெல்லாம், சர்க்கரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கறிவேப்பிலை நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பொருட்கள் கறிவேப்பிலையில் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை உட்கொள்ளுதல் நல்லது.
கறிவேப்பிலை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவு.
உணவில் கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் உடலின் நச்சுகளும் நீங்கும்.
சிறுநீரக சுத்திகரிப்புக்கு கறிவேப்பிலை மிகவும் நன்மை பயக்கும்.
நீங்கள் கறிவேப்பிலை உட்கொள்ளும்போது, உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகிறது.
செரிமான பிரச்சினைகள் தொடர்ந்தால், கறிவேப்பிலை மிகவும் நன்மை பயக்கும்.