இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. நமது சிறு தேவைகளை நிறைவேற்ற இது அவசியம். ஒரு வகையில், இது நம் வாழ்வின் அனைத்து அம்சத்தையும் ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். ஆனால் இதைப் பயன்படுத்துவதில் சிறிய கவனக்குறைவு ஏற்பட்டால் கூட ஆபத்தானது. மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரை இழக்கும் சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம். மனித உடல், மின்சாரத்தைக் கடத்தும். எனவே நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, உயிருக்கே ஆபத்தை வரவழைக்கிறது.


இந்நிலையில், உங்கள் அருகில் யாருக்காவது மின்சாரம் தாக்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.


உங்களுக்கு முன்னால் யாராவது மின்சாரம் தாக்கினால், முதலில் பீதியின்றி மின் இணைப்பின் முக்கிய ஆதாரத்தை துண்டிக்க முயற்சிக்கவும். இதற்குப் பிறகு அனைத்து மின் இணைப்பையும் துண்டிக்கவும். மின்சாரம் தாக்கும் நபரை வெறும் கைகளால் தொட முயற்சிக்காதீர்கள். ஒரு மரக் குச்சி, பிளாஸ்டிக் பைப் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அந்த நபரை மின் இணைப்பில் இருந்து விரைவில் அகற்றவும். மின்சார ஷாக் ஏற்பட்ட மூலாதாரத்திலிருந்து விலகிச் சென்ற உடனேயே அந்த நபரைத் தொடாதீர்கள். அவசரப்பட்டு, மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொட்டால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம்.


முதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். முதலுதவி செய்பவர் கையில் ரப்பர் உறைகளை அணிந்து கொள்வதும், காலில் ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்வதும் நல்லது. அவர் சுயநினைவின்றி இருந்தால், உடனடியாக அவருக்கு CPR கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இதற்கிடையில், ஆம்புலன்ஸ் அழைக்க மறக்காதீர்கள்.


மேலும் படிக்க | பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?


ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் மரணம் ஏற்படலாம். தண்ணீர் கொடுத்தாலும், வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்க வேண்டும், அதுவும் சிறிது நேரம் கழித்து தான் கொடுக்க வேண்டும். மின்சார அதிர்ச்சிக்குப் பிறகு பல வகையான அறிகுறிகளைக் காணலாம். ஒரு நபர் ஆழமான அல்லது லேசான காயத்தால் பாதிக்கப்படலாம் அல்லது பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் லேசான மின்சார ஷாக் ஆக இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு விதமான சிகிச்சை தேவைப்படுகிறது.


ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி அல்லது வேறு எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும். மின்சார அதிர்ச்சியால் காயம் ஏதும் இல்லை ஆனால் உள் அதிர்ச்சி மட்டுமே ஏற்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் அந்த நபரை உடனடியாக கற்றோட்டமான திறந்த வெளியில் உட்கார வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை இயல்பாக ஆகி விடும். இது இருந்தபோதிலும், நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர... நீங்கள் செய்ய வேண்டியவை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ