பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?

இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் நீரிழிவு அபாயம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 /6

தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது சாதாரணமாகிவிட்டது. எங்காவது வெளியே சென்றால் உடனே கடைகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி குடிக்கின்றோம்.

2 /6

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கேடு விளைக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3 /6

கடைகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிப்பதை தாண்டி வீட்டில் இருக்கும் போது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கிறோம்.

4 /6

இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நீரிழிவு மற்றும் ஹார்மோன் செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

5 /6

பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் பிபிஏ இன்சுலின் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம்.  

6 /6

எனவே மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.