புதுடெல்லி: எப்போதாவது அவசரகாலத்தில் ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், முன்பதிவு செய்யவில்லையே என பயப்படத் தேவையில்லை. முன்பதிவு இல்லாமல் கூட ரயிலில் பயணம் செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளாட்பார்ம் டிக்கெட்டில் பயணம்


இந்திய ரயில்வேயின் சிறப்பு விதியின்படி, முன்பதிவு செய்யாமல், அவசர நிலை காரணமாக ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், நடைமேடை டிக்கெட் எடுத்து கொண்டு ரயிலில் ஏற முடியும். டிக்கெட் பரிசோதகரிடம் நிலைமையை எடுத்துக் கூறி  மிக எளிதாக டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்த விதியை ரயில்வே துறையே உருவாக்கியுள்ளது. இதற்காக, பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக TTE என்னும் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் சேருமிடம் வரையிலான ரயில்வே டிக்கெட்டை  TTE வழங்குவார்.


ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!


இந்திய ரயில்வேயின் சிறப்பு விதியின்படி, முன்பதிவு டிக்கெட் இல்லாத நிலையில், ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், நடைமேடை டிக்கெட் மூலம் பயணிக்கலாம். அதாவது, பிளாட்பாரம் டிக்கெட் வாங்கினால் போதும். ரயிலில் ஏறியதும், டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட் எடுக்க வேண்டும். நீங்கள் எந்த ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளீர்கள் என்பதற்கான சான்றாக பிளாட்பார்ம் டிக்கெட் இருக்கும். அதன்படி, நீங்கள் சேருமிடத்திற்கான டிக்கெட்டை TTE வழங்குவார்.


பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மூலம் பயணம் செய்ய, நீங்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். எனினும் நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டை வழக்கமான டிக்கெட் ஆக பயன்படுத்த முடியாது. டிக்கெட் பரிசோதகர் வழங்குவது தான் பயணத்திற்கான டிக்கெட்டாக இருக்கும். 


இது தவிர, ஏதேனும் ஒரு காரணத்தால் நீங்கள் ரயிலை தவறிவிட்டால், அடுத்த இரண்டு நிலையங்கள் வரை TTE உங்கள் இருக்கையை வேறு யாருக்கும் ஒதுக்க முடியாது. அதாவது, அடுத்த இரண்டு ஸ்டேஷன்களில், நீங்கள் அந்த ரயிலை பிடிக்க முயற்ஸி செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டு நிலையங்களுக்குப் பிறகு தான், TTE ஒரு பயணிக்கு RAC டிக்கெட்டுடன் இருக்கை ஒதுக்க முடியும். 


ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR