ஐயன் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்தவர் விநாயகர். அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களை ஏற்படுத்தும் யானைமுகன், தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்குவதாக கணேச புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம்  எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. ஸ்ரீவைணவர்கள், விநாயகரைத் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள்.  


கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.


யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றார். 


Also Read | Ganesh Chaturthi 2021: தும்பிக்கை முகத்தானை நம்பிக்கையுடன் வழிபடுவோம்


சிவபெருமானை விடுவிக்க கஜாசுரனிடம் வந்த நந்தி, அற்புதமாக நடனமாடி மகிழ்வித்தார். மனம் மகிழ்ந்த கஜாசுரன் என்ன வேண்டும் என்று கேட்க, சிவபெருமானை விடுவிக்கச் சொன்னார் நந்தி.  கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். 


பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்கும் வரம் தரவேண்டும் என்ற கஜாசுரனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். 


ஒருமுறை குளிக்கச் சென்ற அன்னை பார்வதி, தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்து, விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். தான் குளித்துவிட்டு வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் சொல்லிவிட்டு செல்கிறார்.


Also Read | Ganesh Chaturthi 2021: முஸ்லீம் நாட்டில் விநாயகருக்கு கோவில் இருப்பது தெரியுமா?


ஆனால், சிவபெருமான் உள்ளே வர முயற்சித்தபோது விநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். 


பிறகு நடந்நதை அறிந்து வருத்தமடைந்த பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதற்காக, வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார் சிவபெருமான். சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வர, அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டத்தை வழங்கினார். 


இந்த சம்பவம் நடைபெற்றது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி. இந்த நன்னாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். 


Also Read | விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR