இந்தியாவின் பேய் ரயில் நிலையங்கள்: அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், பேய்கள் பற்றிய பேச்சு வெறும் கற்பனையாகவே கருத வேண்டியிருக்கும். ஆனால் உலகில் இதுபோன்ற பல தீர்க்கப்படாத மர்மங்கள் உள்ளன. இதன் காரணமாக இன்றும் ஏராளமான மக்கள் இந்த விஷயங்களை முழுமையாக மறுக்க முடியாது. அத்தகைய மர்மமான கதை மற்றும் பின்னணிகளை கொண்ட சில ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ரயில் ஊழியர்கள் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வேலை செய்வதில்லை. இந்த வழியாக ரயில்கள் செல்லும்போது, ​​அதில் அமர்ந்திருப்பவர்கள் சில சமயங்களில் பயத்தில் நடுங்குவதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள மர்ம நிலையத்தின் பெயர் பெகுன்கோடர். சுவாரஸ்யமாக, ஒரு காலத்தில் இந்த நிலையம் மற்ற நிலையங்களைப் போலவே இருந்தது. ஆனால் 1967 க்குப் பிறகு, இந்த நிலையத்தைப் பற்றி விசித்திரமான வதந்திகள் பரவத் தொடங்கின. ஸ்டேஷனில் 'சூனியக்காரி'யை பார்த்ததாக சிலர் கூறியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், மக்கள் இந்த கூற்றை அதிகம் நம்பவில்லை, ஆனால் பின்னர் பலர் 'சூனியக்காரி' பார்ப்பது பற்றி பேசினர். இந்நிலையில், ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தனர். 


ரயில் நிலையம் 2009 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது


ஸ்டேஷன் மாஸ்டர் குடும்ப இறப்பிற்கு பின்னணியில் ரயில் நிலையத்தின் 'சூனியக்காரி' இருப்பதாக கூறப்பட்டது. இதற்குப் பிறகும், ஊழியர்கள் ஸ்டேஷனில் வேலை செய்ய மறுத்ததால், இந்த ரயில் நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டது. இந்த நிலையம் பல ஆண்டுகளாக வெறிச்சோடிய நிலையில், பேய் நிலையம் என்று அறியப்பட்டது. இந்த ரயில் நிலையம் கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக மூடப்பட்டது. 2009ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் துவக்கி வைத்தார். இப்போது 10 ரயில்கள் இங்கு வழக்கமாக நிற்கின்றன, ஆனால் இன்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பயணிகள் நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.


ரவீந்திர சரோபர் மெட்ரோ நிலையம், மேற்கு வங்கம் 


ரவீந்திர சரோபர் என்பது கொல்கத்தா மெட்ரோவின் ஒரு நிலையம். பேய் கதைகள் நிறைந்த இந்த நிலையம் நகரத்தில் மிகவும் பிரபலமான இடமாகும். இரவு 10:30 மணியளவில் கடைசி மெட்ரோ இந்த நிலையத்தை கடந்து செல்லும் போது, மக்கள் தண்டவாளத்தில் பேய் போன்ற தோற்றத்தை காணலாம் என்று கூறப்படுகிறது.


 பரோக் ஸ்டேஷன், ஹிமாச்சலப் பிரதேசம்


சிம்லாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதை ( சுரங்கப்பாதை எண். 33)  ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இது அமானுஷ்ய செயல்களின் இடமாக நம்பப்படுகிறது. சுரங்கப்பாதை எண். 33  என்னும் பரோக் சுரங்கப்பாதை ஒரு பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் பரோக் என்பவரால் கட்டப்பட்டது. சுரங்கப்பாதையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதால், கர்னல் பரோக்கின் ஆவி இன்னும் சுரங்கப்பாதையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.


மேலும் படிக்க | Odisha Train Accident: இருக்கையை மாற்றிக் கொண்டதால் உயிர் தப்பிய தந்தை - மகள்!


சித்தூர் ஸ்டேஷன், ஆந்திரப் பிரதேசம்


சித்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் பேய்கள் இருப்பதாக நம்பினர். ஹரி சிங் என்ற சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர், சித்தூர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது, சக RPF வீரர்கள் மற்றும் TTE களால் தாக்கப்பட்டார். அப்போதிருந்து, இந்த அதிகாரியின் ஆன்மா நீதியைத் தேடுகிறது என்று நம்பப்படுகிறது.


நைனி நிலையம், உத்தரபிரதேசம்


உ.பி. மாநிலத்தின் நைனி நிலையம் நைனி சிறைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. பல சுதந்திர போராட்ட வீரர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கடைசியில் இறந்த சிறை இது. அதனால்தான், இறந்தவர்களின் ஆன்மா இரவில் ரயில் நிலையம் மற்றும் பாதைகளில் சுற்றித் திரிகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.


லூதியானா ஸ்டேஷன், பஞ்சாப்


ரயில்வே ரெசர்வேஷன் கவுண்டர் அதிகாரி சுபாஷ் இறந்த இந்த ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஒரு அறையில் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த நபர் தனது வேலையை மிகவும் நேசித்த நிலையில், அவருடைய ஆவி இன்னும் அறைக்குள் பதுங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒருவர் இந்த அறையில் அவரது இடத்தில் உட்கார முயற்சிக்கும் போது, அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 'ரயில் விபத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது' - ரயில்வே அமைச்சர் சொன்னது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ