Odisha Train Accident: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட மூன்று ரயில்கள் நேற்று முன்தினம் மாலை ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில், ரயில் பெட்டிகள் தடம் புரண்டது மற்றும் 17 பெட்டிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியது.
கடும் தண்டனை
விபத்து நடந்த சம்பவ இடத்தை பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பார்வையிட்டனர். மேலும், பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தவறுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதற்கு முன்னர், ரயில்வேதுறை சார்பிலும், பிரதமர் நிவாரண நிதி தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Odisha Train Accident: இருக்கையை மாற்றிக் கொண்டதால் உயிர் தப்பிய தந்தை - மகள்!
இன்றும் ஆய்வு
சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து, விபத்துக்குள்ளான பெட்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றுவது, தண்டவாளங்களை சீரமைப்பது, மின்சார கம்பிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இரண்டாவது நாளாக விபத்து நடந்த இடத்திற்கு வந்தார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் மேற்பார்வையிட்டார்.
விரைவில் முழு அறிக்கை
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளரை சந்தித்தபோது,"மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்றுக்குள் ரயில் பாதை மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டது, இதற்கு யார் காரணம் என்பது தெரியவந்தது. விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும். பிரதமர் மோடி நேற்று அந்த இடத்தை ஆய்வு செய்தார். இன்று தண்டவாளத்தை மீட்க முயற்சிப்போம். உடல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடித்து இந்த பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்குவதே எங்கள் இலக்கு"என்று அவர் கூறினார்.
#WATCH | The commissioner of railway safety has investigated the matter and let the investigation report come but we have identified the cause of the incident and the people responsible for it... It happened due to a change in electronic interlocking. Right now our focus is on… pic.twitter.com/UaOVXTeOKZ
— ANI (@ANI) June 4, 2023
சிவில் நிர்வாகம் மற்றும் இந்திய ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இறந்த மற்றும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கு உதவும் வகையில் இந்திய விமானப்படை (IAF) Mi-17 ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.
பாலசோரில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளில் ரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 1,000 க்கும் மேற்பட்ட மக்கள், ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், இரண்டு விபத்து நிவாரண ரயில்கள் மற்றும் மூன்று முதல் நான்கு ரயில்வே மற்றும் சாலை கிரேன்கள் ஆரம்பகால மறுசீரமைப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பாலசோர் ரயில் விபத்து எப்படி, ஏன் நடந்தது? திடுக்கிடும் காரணம் வெளியானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ