வாழ்க்கையில் பலவிதமான நம்பிக்கைகளும் நமது எண்ணங்களுமே நம்மை வழிநடத்துகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிறோம். இது கலாச்சாரம் உட்பட அனைத்திற்குமே பொருந்தும். இன்றைய காலகட்டத்தில் வாஸ்து என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் பல நூற்றாண்டுகளாக வாஸ்து என்ற அறிவியல் பின்பற்றப்பட்டுவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் தங்களுடைய துன்பங்களுக்கு நிவாரணத்தை தேடும்போது, ஜோதிடம், கைரேகை, எண் கணிதம், அதிர்ஷ்ட கற்கள் என நீளும் பட்டியலில் வாஸ்துவும் இடம் பிடித்துள்ளது. இதில், பிறந்த நேரம் சரியாக தெரியாவிட்டால் ஜோதிடத்தில் பலன் சரியாக இருக்காது? ராசி மற்றும் பிறந்த நாள் தெரியாவிட்டால் அதிர்ஷ்ட கற்களால் முழு பயனையும் அடைய முடியாது.


ஆனால், வாஸ்து சாஸ்திரம் பொதுவானது. இதில், தனிப்பட்ட மனிதன், சாதி, மதம், பிறந்த நாள் தேதி, நட்சத்திரங்கள் என எதுவும் கிடையாது. இயற்கையில் உள்ள சூரியன் சந்திரன் போன்று பொதுவான வாஸ்து கலை, வீட்டிற்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்றது.


நமது ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இல்லாவிட்டாலும்  தசாபுத்திகள் சரியாக இல்லாவிட்டாலும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். அதுபோன்ற சமயத்தில் இந்த எதற்கும் கட்டுப்பாத வாஸ்து நமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கான திறவுகோலாக உதவும்.


Also Read | பண மழை வேண்டுமா? அப்போ இந்த வாஸ்து டிப்ஸ் உங்களுக்கு தான்!


உதாரணமாக, வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டு வாசலில் கண்ணாடி வைப்பதை எடுத்துக் கொள்வோம். நமது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்களை நுழையாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் முகப்பில் கண்ணாடியை மாட்டி வைக்கிறோம். எண்ணமே செயலாகும் என்பது நிதர்சனமான என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.


மகாலட்சுமி வாசம் செய்கிற பொருளாக இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை வெளிப்புறம் நோக்கி மாட்டி வைத்தால், வீட்டிற்குள் வருபவர்களின் முதல் பார்வையில் அவர்களது முகமே தெரியும். 


யாருமே தன்னைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே வீட்டிற்குள் நுழையும் அந்தக் கணத்தில் அவர்களிடம் எதிர்மறையான எண்ணம் இருந்தால்கூட, அது மாறிவிடும். அதுமட்டுமல்ல, அன்னை லட்சுமி வாசம் செய்யும் கண்ணாடியில் ஒருவரின் முகம் எதிரொலிக்கும்போது, அதை பார்ப்பவர் மனதில் நேர்மறையான எண்ணம் தோன்றும். வீட்டிற்குள் இருப்பவர்கள் மீதான ஆக்கப்பூர்வமான எண்ணத்தை ஏற்படுத்தும். 


வீட்டிற்குள் இருப்பவர்களின் நேரம் சரியாக இல்லாமல் இருக்கும்போது, உள்ளே வரும் பிறரின் எண்ணமும் எதிர்மறையாக இருந்தால், அது ஏற்படுத்தும் சிக்கலை வீட்டு வாசலில் கண்ணாடி மாட்டி வைக்கும் சிறிய வாஸ்து நடைமுறை மாற்றிவிடுகிறது.  
வாஸ்து என்பது நமது வாழ்க்கையை நிம்மதியாக்கும், வளமாக்கும் ஒரு உன்னதமான கலை ஆகும்.


Read Also | வீட்டுல மணி பிளாண்ட் வெச்சிருக்கீங்களா? இந்த வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு உதவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR