Re-KYC : KYC காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், அந்த வங்கிக் கணக்கை மீண்டும் திறக்க விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்காக மட்டுமே. அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் KYC விவரங்களை அவ்வப்போது புதுப்பிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு அறிக்கையின்படி, RBI மறு KYC தொடர்பான சுற்றறிக்கையை 29 மே 2019 அன்று வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில், ஏற்கனவே உள்ள எந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பான் (PAN Card), படிவம்-60 அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஆவணங்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், அவர்களது கணக்கு முடக்கப்பட்டு, ஆக்டிவ் ஆக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், KYC காரணமாக முடக்கப்பட்ட கணக்கை நீங்கள் புதுப்பிக்கலாம்.


Re-KYC செய்வதற்கான செயல்முறை


பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)


Re-KYC செயல்முறை வெவ்வேறு வகை வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்டது. பாங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் KYC செயல்முறையை முடிக்க மற்றும் அவர்களின் வங்கிக் கணக்கை மீண்டும் செயல்படுத்த 3 எளிய வழிகள் உள்ளன.


மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள்


1. முதலில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்குச் செல்ல வேண்டும். Re-KYC படிவத்தையும் தேவையான KYC ஆவணங்களின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.


2. வாடிக்கையாளருக்கு ஆதார் எண் மற்றும் அசல் பான் கார்டு இருந்தால், அவர் வீடியோ அழைப்பு மூலம் மீண்டும் KYC செயல்முறையை முடிக்க முடியும்.


3. பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளரின் KYC விவரங்களில் மாற்றம் இல்லை என்றால், அவர் மின்னஞ்சல், தபால் அல்லது கூரியர் மூலம் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரத்தை அனுப்பலாம். இதைச் செய்வதன் மூலம் அவரது Re-KYC செயல்முறை முடிவடையும்.


4. மொபைல் ஆப் மூலமாகவும் Re-KYC செய்யப்படும்


கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)


கோடக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங் செயலி மூலம் Re-KYC செயல்முறையை முடிப்பதற்கான வசதியையும் வழங்கியுள்ளது. இதற்கு, முதலில் நீங்கள் Kotak மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும். கிளிக் செய்த பிறகு, இங்கே நீங்கள் ‘Re KYC’ என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். இதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் Re-KYC செயல்முறையை OTP மூலம் முடித்து கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம்.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ