போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள்

Post Office Scheme: 115 மாதங்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கக்கூடிய அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 14, 2023, 05:11 PM IST
  • அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டம்.
  • நீங்கள் 7.5% வட்டி பெறுவீர்கள்.
  • வெறும் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்து 100 மடங்கு பணம் பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள் title=

போஸ்ட் ஆபிஸ் சூப்பர் ஹிட் திட்டம்: இன்றைய காலகட்டத்தில், ஒரு பணியாளராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியைப் பிற்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதன்படி முதலீடு செய்ய, பலர் நிலையான வைப்புத்தொகை, ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது பிற வகையான திட்டங்களை பெறுகின்றனர். இருப்பினும், ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே, நீங்களும் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான தபால் அலுவலக திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நல்ல வருமானத்திற்காக மக்கள் விரும்பும் பல திட்டங்களை அஞ்சல் அலுவலகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இதில் 115 மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கக்கூடிய அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டங்களில் ஒன்றைப் பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். 

இதுதான் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டம்:
அனைத்து வயதினருக்கும் ஏற்ப அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புத் திட்டங்கள் உள்ளன, அவற்றில் பல மிகவும் பிரபலமானவை. அதில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்ரா யோஜனா ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் வெறும் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்து 100 மடங்கு பணம் பெறலாம். அதுமட்டுமின்றி அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்த 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், முதலீட்டாளர்கள், 9 வருடங்கள், 7 மாதங்கள் முதலீடு செய்த பிறகு, அடுத்த மூன்றே மாதங்களில் இரட்டிப்பு லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. உடனே படிக்கவும்

நீங்கள் 7.5% வட்டி பெறுவீர்கள்:
அஞ்சல் அலுவலக கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். இது சில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம். அதுமட்டுமின்றி தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக 7 சதவீத வட்டியுடன் இருந்த இந்த திட்டம், தற்போது அது 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வட்டி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டுப் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும்:
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் கிசான் விகாஸ் பத்திராவின் மெச்சூரிட்டி காலத்தை 2023 ஆம் ஆண்டில் 120 மாதங்களாக உயர்த்தியது, அதன் முந்தைய காலம் 123 மாதங்கள் ஆகும். இருப்பினும், இது தற்போது 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக 115 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

எனவே இத்தகைய அற்புதமான கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உடனடியாக அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று திட்த்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்கு மத்திய அரசின் முழுப்பாதுகாப்பு உள்ளது. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. அதேபோல, ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு, எத்தனை முறை வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க | கடனை கொடுத்த பின்பும் வீட்டு பத்திரங்கள் கிடைக்கவில்லையா? ரிசர்வ் வங்கி புதிய ரூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News