நவக்கிரகங்களில் புதன் கிரகம் அறிவுக்கும் கலைக்கும் கல்விக்கும் காரணமானவர்.  ஒருவரின் ஜாதகத்தில் புதன் சரியான இடத்தில் அமர்ந்து அனுக்கிரகம் புரிந்தால் கல்வி கேள்வியில் வெற்றி பெறுவார்.
அறிவாளியாக இருப்பவர்கள், கலைஞராக இருப்பவர்களும், வாய் வார்த்தைகளால் அனைவரையும் கட்டுப்போடும் ஆற்றல் படைத்தவர்களுக்கு புதனின் அருள் பூரணமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவக்கிரகங்களில் சூரியனின் மகன் சனீஸ்வரர் என்று சொன்னால், சந்திரனின் மகன் புதன் என்பது புராணங்கள் சொல்லும் வரலாறு.  சந்திரன் மனோக்காரகன் என்று சொல்லப்படுபவர். மனதிற்கு காரகனான தந்தையின் மகன் புதனோ அறிவுக்கும் தெளிவுக்கும் காரணமானவர்.


ஒருவரின் ஜாதகத்தில் புதனோடு சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் அவர் நிம்மதியான வாழ்க்கை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்து, தொட்ட காரியங்களில் வெற்றி என வெற்றியாளராக வாழ்வார்.


பேச்சுத்திறமை கொண்டவர்களும், கணக்குப் பாடத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கும் புதன் உச்சமாக இருப்பார். 


மேலும் படிக்க | புதன் ராசி மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், செல்வம் செழிக்கும்


புதனின் அமைப்பு ஒருவரின் ஜாதகத்தில் மிகமிக பலமாக இருந்தால், அவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்குவார்.


அழியாச் செல்வமான கல்வியை அளப்பரிய வழங்கும் புதன், தொழிலையும், வேலையையும் ஒருவருக்கு கொடுப்பதில் வல்லவர். 


புதனின் அருள் இருப்பவர்களே நுணுக்கமானவர்களாக இருப்பார்கள். அதேபோல பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்று சொல்வது வாரத்தில் ஒரு நாளுக்கு மட்டும் சொல்வதல்ல, புதனின் அருள் தங்கம் கிடைப்பதை விட கடினமானது என்ற பொருள் கொள்ள வேண்டிய பழமொழி என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.


அதேபோல புதனின் அருள் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னிலை இழக்காத திடச்சித்தமும் ஏற்படும். 


ஆனால் புதன் ஒருவரின் ஜாதகத்தில் சாதகமான இடத்தில் இருந்தாலும், அது எங்கே எப்படி எந்த காலத்தில் வேலை செய்கிறது என்பதும் தான் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம். 


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்


ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் பாவகத்தில் புதன் இருந்தால் சம்பளத்துக்கு வேலை பார்ப்பாரா இல்லை சொந்த தொழில் செய்வாரா என்பது முதல் ஒருவரின் வாழ்க்கைத் துணை வேலை பார்ப்பாரா இல்லை தொழில் செய்வாரா என்பது வரை சொல்லிவிட முடியும். 


இதுவே புதனின் பார்வை வக்ரமாக இருந்தால் வேலையில் சங்கடம், வேலை இழப்பு,  கல்வி தடைபடுவது, சமூகத்தில் அந்தஸ்து இழப்பு என பலவிதமான பின்னடைவுகள் ஏற்படும்.


புதன் ஒருவரின் ஜாதகத்தில் (Horoscope of a person) பொருத்தமான இடத்தில் அமர்ந்திருந்தால் வாழ்வில் பின்னடைவு இருக்காது.


ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தால் பலத்துடன், அம்சத்துடன், அருளுடன் வாழலாம்...


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR