இறைவனுக்கு மலர்களை ஈடுபாட்டுடன், பக்தி சிரத்தையுடன் உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்தால் அவர் அகம் மகிழ்வார் என்பது உறுதி. இறைவனின் அருளை இதன் மூலம் பெற்று வளம் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இப்படி நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில நியதிகள் உள்ளன. சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.


ALSO READ | வீட்டின் பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்


விநாயகருக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


துளசி- பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.


விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


ஊமத்தம்பூ - விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.


சிவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


தாழம்பூ - சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.


அம்பிகைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


அறுகம்புல் -அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.


லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


தும்பை மலர் -லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.


துர்க்கைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


துர்கை - துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.


சூரியனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


வில்வம் -சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.


சரஸ்வதி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


பவள மலர் - சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது


பைரவரருக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்


மல்லிகை மலர் -பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.


ALSO READ | எடுத்த காரியத்தை கைகூட செய்யும் பீஜ அட்சர மந்திரங்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR