எடுத்த காரியத்தை கைகூட செய்யும் பீஜ அட்சர மந்திரங்கள்

இந்துக்கள் பெரும்பாலோனோர் காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அட்சர மந்திரங்கள் உள்ளன. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2021, 07:23 PM IST
  • பீஜம் என்றால் விதை. அக்‌ஷரம் என்றால் எழுத்துக்கள்.
  • காஞ்சி மஹா பெரியவரும் “பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று கூறியிருக்கிறார்.
  • இந்துக்கள் பெரும்பாலோனோர் காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு.
எடுத்த காரியத்தை கைகூட செய்யும் பீஜ அட்சர மந்திரங்கள்

இந்துக்கள் பெரும்பாலோனோர் காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அட்சர மந்திரங்கள் உள்ளன. இவற்றை தவறாமல் கூறி வந்தால், வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் காரியம் அனைத்தும் கை கூடி வாழ்க்கையில் சந்தோஷம் பெறலாம்.

பீஜம் என்றால் விதை. அக்‌ஷரம் என்றால் எழுத்துக்கள். விதையை போன்ற எழுத்துக்கள் அடங்கிய மந்திரங்கள் என்பதே பீஜாட்சர மந்திரம் எனப்படுகிறது.

பீஜாட்சர மந்திரம் நேர்மறை அதிர்வாற்றலை உண்டாக்க வல்லது. அதனால் அதை சொல்பவர்களுக்கு, அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆன்ம சக்தியையும்,  ஜீவ சக்தியும் ஏற்படுத்துகிறது.அத்தகைய சக்தி வாய்ந்த பீஜாட்சர மந்திரம் ஒவ்வொரு ராசிக்குமா மந்திரத்தை, அந்தந்த ராசிகார்கள்  தினமும் சொல்லி வந்தால் அதன் சக்தியை நிச்சயம் உணர முடியும். 

ALSO READ | புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு

காஞ்சி மஹா பெரியவரும் “பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று கூறியிருக்கிறார்.  அவரவர் ராசிக்கு  உரிய அட்சர மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.இதை தினசரி எவ்வளவு முறை பக்தியுடன் மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அத்தனை நன்மைகள் வாழ்க்கையில்வந்து சேரும்.

12 ராசிகளுக்கு உரிய அட்சர மந்திரங்கள்

1. மேஷம் :         
- ஓம் ஐம்  க்லீம் சௌம்
2. ரிஷபம் :            
- ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
3. மிதுனம் :         
- ஓம் ஸ்ரீம் ஐம்  சௌ
4. கடகம் :            
- ஓம் ஐம்  க்லீம் ஸ்ரீம்
5. சிம்மம் :             
- ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்  சௌ
6. கன்னி :              
 ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
7. துலாம் :             
- ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 
8. விருச்சிகம் :        
- ஓம் ஐம் க்லீம் சௌ
9. தனுசு :                
- ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
10. மகரம் :       
- ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்சௌ
11. கும்பம் :
- ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
12. மீனம் :          
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ

ALSO READ | Spiritual Trees: தல விருட்சம் பற்றிய சுவாரசியமான தகவல்கள், 8 புனித மரங்கள் கொண்ட கோவில் எது?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News