கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழு BTS, இசையுலகில் மீண்டும் ஓர் சாதனை படைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல அமெரிக்க ஊடகமான Billboard-ன் Billboard's Social 50 chart பட்டியலில் தொடர்ந்து 57 வாரங்களுக்கு முதல் இடம் வகித்து வந்தது. இக்குழுவிற்கு முன்னாதக இப்பட்டியலில் Justin Bieber தொடர்ந்து 56 வாரங்களுக்கு முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்தார்.


இச்சாதனையினை முறியடித்து தற்போது BTS குழு புது சாதனை படைத்துள்ளது.



Billboard's Social 50- என்பது வாராந்திர இசை தர பட்டியல் ஆகும். வாரம்தோறும் இணையத்தில் இசைக்கப்படும் பாடல்கள், இணையத்தில் அதிகம் தேடப்படும் இசைக் கலைஞர்களின் பெயர்களின் அடிப்படையில் இந்த Billboard's Social 50 chart உறுவாக்கப்படுகிறது.


முன்னதாக Justin Bieber-ன் Love Yourself இணையத்தை கலக்கி வந்த நிலையில் இவரது பெயர் தொடர்ந்து 56 வாரங்களுக்கு முதல் இடத்திலேயே இருந்தது. இதற்கிடையில் கொரியன் BTS(Boys Band)-ன் FAKE LOVE பாடல் வெளியான பிறகு, இப்பாடல் Justin Bieber-ன் பாடல்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.



பாப் ரசிகர்களை கொள்ளைக்கொண்ட இந்த இசைக்குழு தற்போது இன்ஸ்டாகிராமில் 12.3 மில்லியன் பின்தொடர்பாளர்களையும், 15.9 மில்லியன் ட்விட்டர் பின் தொடர்பாளர்களையும் கொண்டுள்ளது.