கேடிஎம் 250 அட்வென்சர் விலை குறைந்தது. கேடிஎம் தனது பைக் 250 அட்வென்ச்சரின் விலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துள்ளது. பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்ட் கேடிஎம் தனது பைக் 250 அட்வென்ச்சர் (250 showroom price) விலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ .25,000 குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஜாஜ் ஆட்டோவின் ஒரே பிரீமியம் பிராண்ட் கே.டி.எம். அட்வென்ச்சர் (KTM 250 Adventure) ஆகஸ்ட் 31 வரை வாடிக்கையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கொடுத்துள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர் டெல்லி ஷோரூம் விலையில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுவரை அதன் விலை சுமார் 2.55 லட்சம் ரூபாய் ஆக இருந்தது.


பஜாஜ் ஆட்டோவின் தலைவர் (Probiking) சுமித் நாரங் இது குறித்து விடுத்த அறிக்கையில், “இந்த சிறப்பு குறிப்பிட்ட காலத்துக்கு கிடைக்கும். கேடிஎம் 250 அட்வென்ச்சர், நிறைய இளைஞர்களை ஈர்க்கும் என்றும், இந்த பிரிவில் விரைவான மேம்படுத்தலாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”


Also Read | 3 பில்லியன் பதிவிறக்கங்களுடன் புதிய சாதனை படைத்தது டிக்டாக்


கேடிஎம் 250 அட்வென்ச்சர்: 248 சிசி திரவ குளிரூட்டப்பட்ட இயந்திரம்


கேடிஎம் 250 அட்வென்ச்சர் 248 சிசி லிக்விட் கூல்ட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 30 பிஎஸ் சக்தியையும் 24 என்எம் டார்க்கையும் (torque) ஒரு மேம்பட்ட அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எஞ்சினில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் (gearbox) பொருத்தப்பட்டுள்ளது. 2012இல் இந்திய சந்தையில் கே.டி.எம் நுழைந்தது. இது தற்போது 365 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 460 க்கும் மேற்பட்ட கடைகளிலும் கிடைக்கிறது. கே.டி.எம் 250 அட்வென்ச்சரில் ஜி.பி.எஸ் bracket, crash bangs, ரேடியேட்டர் பாதுகாப்பு கிரில், ஹெட்லேம்ப் பாதுகாப்பு மற்றும் ஹேண்டில்பார் பேட்கள் என பல அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்தியாவில் இதுவரை 2.7 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன


கே.டி.எம் இதுவரை இந்தியாவில் 2.7 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகளை விற்றுள்ளது, இது கே.டி.எம்-ன் மிகப்பெரிய உலகளாவிய சந்தையாக திகழ்கிறது. பஜாஜ் மற்றும் கேடிஎம் இடையேயான கூட்டாண்மை 13 ஆண்டுகளுக்கும் மேலானது. பஜாஜ் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளர் கே.டி.எம் ஏ.ஜி (KTM AG) யில் 48 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.


Also Read | செம்ம பேட்டரி பேக்கப்; Realme மாஸ் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR