Jackpot for Aries, Gemini, Aquarius, and Pisces : லக்ஷ்மி நாராயண யோகத்தால் மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிகளுக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. எந்த ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என இங்கே பார்க்கலாம். புதனும், சுக்கிரனும் எந்த ராசியில் இணைந்தால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். எந்த ராசியில் இணைக்கிறார்கள் என்பதை பொறுத்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள், அதிர்ஷ்டம், மெகா ஜாக்பாட் என்பதை தெரிந்து கொள்ளலாம். முன்பு ரிஷப ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்து லக்ஷ்மி நாராணய யோகத்தை உருவாக்கிய நிலையில், இப்போது விருச்சிக ராசியில் இந்த யோகத்தை உருவாக்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்ஷ்மி நாராயண யோகம்


இதனால், 4 ராசிக்காரர்களுக்கு மெகா ஜாக்பாட் அடிச்சிருக்கு. மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ஆகிய 4 ராசிகளும் தான் இந்த லக்ஷ்மி நாராயண யோகத்தால் அபரிமிதமான பலன்களை பெறப்போகிறார்கள். தீபாவளிக்கு முன்பே இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு என்பதால், இந்த ஆண்டு தீபாவளி பெரும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. 


மேலும் படிக்க | ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!


புதன் கிரகத்தின் பலன்


புதன் கிரகத்தை பொறுத்தவரை ஒருவருக்கு புத்திக்கூர்மை, ஞானத்தையும் கொடுக்கக்கூடியது. ஜாதகத்தில் இந்த கிரகம் மட்டும் வலிமையாக இருந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட சூழலையும் அந்த நபர் அறிவுத்திறமையால் கையாண்டு மீண்டு வந்துவிடுவார்கள். தொழில்நுட்ப துறைகளில் கோலோச்சுபவர்கள் எல்லோருமே பெரும்பாலும் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தை கொண்டவர்களாகவே இருப்பார்கள். பேச்சாளர்கள், வணிகர்கள், கல்வியாளர்களுக்கு எல்லாம் புதன் கிரகம் வலுவாக இருக்கும்.


சுக்கிரன் கிரகத்தின் பலன்


சுக்கிரன் கிரகத்தைப் வலிமையை பொறுத்து தான் வீடு, வாகனம், மனைவி எல்லாம் ஒருவருக்கு தீர்மானமாகும். இந்த கிரகம், மற்ற எல்லா கிரகங்களைக் காட்டிலும் தனித்துவமானவர். அனைத்து லக்னங்களிலும் ஆட்சி செய்யக்கூடியவர், ஒருவருக்கு கிடைக்ககூடிய பொருள், பதவி, வருமானம், செல்வாக்கு எல்லாம் கொடுப்பவர். இப்போது இவருடன் புதன் சேர்ந்திருப்பதால், இரட்டிப்பு பலன்கள் எல்லாம் 4 ராசிகளுக்கும் கிடைக்கும். 


விருச்சிகத்தில் புதன்-சுக்கிரன்


ஜோதிடக் கணக்கீடுகளின்படி, தீபாவளிக்கு முன்னதாக, அக்டோபர் 29 ஆம் தேதி, புதன் விருச்சிக ராசிக்குள் நுழைவார். சுகங்களையும் ஆடம்பரங்களையும் தருபவரான சுக்கிரன் இந்த ராசியில் ஏற்கனவே இருக்கிறார். புதன் பெயர்ச்சிக்குப் பிறகு இரண்டு கிரகங்களும் சேர்ந்து லக்ஷ்மி நாராயண யோகத்தை உண்டாக்கும். 


மேஷம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் பெறுவீர்கள். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், நீங்கள் அதை திரும்பப் பெறலாம்.


மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்டலாம். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கூடும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறவுகள் வலுவடையும்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதைத் தீர்க்க முடியும். இது தவிர, வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் கூடும். உங்கள் பணியை கருத்தில் கொண்டு உங்கள் மேலதிகாரி உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கலாம். சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுபயோகம் ஆரம்பம்... வேலை, வியாபாரத்தில் வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ