இந்திய ரயில்வேயின் இரண்டு புதிய ரயில்களான வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ ஆகிய இரண்டும் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு போட்டியாக, இரவு நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில்களின் எண்ணிக்கையையும் தரத்தினையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. மறுபுறம், வந்தே மெட்ரோ விரைவான மற்றும் வசதியான குறுகிய தூர பயணங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தே மெட்ரோவிற்கான சோதனைகள் விரைவில் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் சோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும்  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய ரயில்கள் பயணிகளின் பயண அனுபவத்தை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும், உதவும். துரித வேகத்துடன்,   நவீன் தொழில்நுட்பத்துடன் இணைந்த வசதியான பயணத்தையும் வழங்குவதற்கான முயற்சியை இது குறிக்கிறது. 


2029ஆம் ஆண்டுக்குள் சுமார் 250 யூனிட் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். “வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ரயில் பெட்டியின் நிறைவுப் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன, முதல் ரயில் இரண்டு மாதத்திற்குள் இயக்கப்படும். அனைத்து தொழில்நுட்ப பணிகளும் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இந்த ரயில் பெட்டியை பெங்களூரில் உள்ள BEML லிமிடெட் தயாரித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், பயணிகளுக்கு நவீன வசதிகளிடன் கூடிய சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். உலகளாவிய தரத்துடன் கூடிய இந்த ரயில்கள் எதிர்காலத்தில் மேலும் பல்வேறு வசதிகளை வழங்கும்,” என்று வைஷ்ணவ் கூறினார்.


வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அம்சங்கள்


1. வந்தே பாரத் ஸ்லீப்பர் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும். மேலும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் சோதனை செய்யப்படும்.


2. வந்தே பாரத் ஸ்லீப்பர் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும்: 11 ஏசி 3-அடுக்கு பெட்டிகள், 4 ஏசி 2-அடுக்கு பெட்டிகள் மற்றும் 1 ஏசி 1 ஆம் வகுப்பு பெட்டிகள்.


3. ஏசி 3-அடுக்கில் 611 பேர், ஏசி 2-அடுக்கில் 188 பேர், ஏசி முதல் வகுப்பில் 24 பேர் உட்பட மொத்தம் 823 பயணிகள் இதில் பயணிக்கலாம்.


4. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை மிஞ்சும் வகையில், கூடுதல் குஷனிங் வசதிகள், வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்யும்.


5. வந்தே பாரத் ஸ்லீப்பரின் உட்புறம் கிரீம், மஞ்சள் மற்றும் மர நிழல்களுடன் இனிமையான வண்ணத் திட்டத்தைப் பின்பற்றி, இனிமையான சூழலை உருவாக்கும்.


6. மேம்படுத்தப்பட்ட ஏணி வடிவமைப்புகள் மூலம் பயணிகள் மேல் மற்றும் நடுத்தர பெர்த்களை எளிதாக அணுக முடியும்.


7. பொதுவான பகுதிகளில் சென்சார் அடிப்படையிலான விளக்குகள் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மேல்நிலை விளக்குகள் போதுமான வெளிச்சத்தை வழங்கும். மேலும், அதிர்வுகளை உணராத வண்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


8. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சிறப்பு பெர்த்கள் மற்றும் கழிப்பறைகள் மற்றும் தானியங்கி நுழைவு/வெளியேறும் கதவுகள் ஆகியவை அம்சங்களில் அடங்கும்.


9. அரை-அதிவேக ரயிலாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும், 180 கிமீ வேகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படும்.


மேலும் படிக்க | ரயில் விபத்துக்கான காப்பீடு... 45 பைசாவிற்கு ரயில் பயணக் காப்பீடு... முழு விபரம்..!!


வந்தே மெட்ரோ சிறப்பு அம்சங்கள்


1. சுயமாக இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில் மெயின்லைன் EMU ரயில்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். 


2. வழக்கமான ரயில்களுக்குப் பதிலாக, வந்தே மெட்ரோ மிகவும் பயனுள்ள மற்றும் வசதியான போக்குவரத்து முறையாகும். ஏனெனில் அதை இழுக்க ஒரு லோகோமோட்டிவ் தேவையில்லை. 


3. வந்தே மெட்ரோவில் LCD காட்சிப்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் அமைப்புகள் மற்றும் இலகுரக அலுமினிய லக்கேஜ் ரேக்குகள் இருக்கும்.


4. இந்த ரயிலில் ரோலர் ஷேட்களுடன் கூடிய பெரிய பனோரமிக் சீல் செய்யப்பட்ட ஜன்னல்கள், ரூட் இன்டிகேட்டர் டிஸ்ப்ளேக்கள், மொபைல் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் தானியங்கி நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகள் ஆகியவை அடங்கும்.
வந்தே மெட்ரோவில் ஒரு பெட்டியில் மொத்தம் 300 பேர் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.


5. உள்ளே, வந்தே மெட்ரோ ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 இருக்கைகள் இருக்கும், ஒவ்வொன்றும் சமகால, இலகுரக மெத்தைகள் மற்றும் கூடுதலாக 200 பேர் நிற்கும் வகையில் இட வசதியைக் கொண்டிருக்கும்.


6. வந்தே மெட்ரோ 130 கிமீ வேகத்தில் இயங்கும். வந்தே மெட்ரோ ரயில்கள் வேகமான முடுக்கம் மற்றும் வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியிருக்கும், அவை 130 கிமீ வேகத்தில்- தற்போதைய மெயின்லைன் EMU களை விட வேகமாக இயக்க உதவும்.


மேலும் படிக்க | வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ