மாறிவரும் வாழ்க்கை முறை பல நோய்களுக்கு வழிவகுத்து வருகிறது. மிக இளம் வயதிலேயே, மக்கள் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மாரடைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, உயர் பிபி அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு போன்ற நோய்களை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் சர்க்கரை அதிகரிப்பு 


பெரும்பாலானோரின் இரத்த சர்க்கரை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அவர்கள், நாள்தோறும் மருந்து மாத்திரைகளின் உதவியோடு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உடலில் வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் சில டிப்ஸ்களை உங்களுக்கு சொல்கிறோம். 


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


கால்களில் கூச்சம்


உங்கள் கால்கள் அடிக்கடி உணர்ச்சியற்றதாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எனவே இதை அலட்சியப்படுத்த வேண்டாம், ஏனெனில் இது சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.


கால்கள் வீக்கம்


உங்கள் பாதங்களில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால், நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பாதங்கள் வீங்குவதும் இரத்தச் சர்க்கரை உயர்வின் அறிகுறியாக இருக்கலாம்.  கூடுதலாக, உங்கள் கால்களில் ஏதேனும் அநாவசியமாக புண்கள் ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களின் பாதங்கள் விரைவில் குணமடையாது. இது சர்க்கரை நோய் தீவிரத்தின் அறிகுறியாகும். 


மேலும் படிக்க | Zinc Diet: குழந்தைகளின் துத்தநாகக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் உணவுகள்


(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZeeNews தகவல்களின் அடிப்படையில் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளது. உண்மைத் தன்மைக்கு பொறுப்பில்லை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR