இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் மனதில் என்ன தோன்றும்?. இந்த ஒரு அழகான வாழ்க்கைக்காக வருந்துகிறாரா? அல்லது மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறாரா? என கேட்கவும் முடியாது. அந்த நொடியில் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நொடியில் வந்துபோகும் என நம்பப்படுகிறது. அப்படியான நபர்களிடம் இருந்து இன்னும் சில நாட்கள் வாழக்கூடிய நபர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்


வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று நீங்கள் நினைத்தாலும், உங்கள் தலைக்கு மேல் கூரையும், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்க உடைகள், உறைவிடம் மற்றும் உணவும் இருப்பது எவ்வளவு பாக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். வாழ்க்கை மிகவும் எதிர்பாராத திருப்பங்களை உங்கள் மீது வீசுகிறது. உங்களை முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்கிறது மற்றும் பயமுறுத்துகிறது. இந்த தருணங்களில் நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு நடந்த நல்ல விஷயங்கள் நினைத்து பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.


அன்புக்குரியவர்களின் ஆதரவு


ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் தங்கள் உறவினர்களைப் பார்க்கச் சென்றால், அவர்கள் தங்கள் ஆதரவையும் ஆறுதலையும் தருகிறார்கள். எனவே, உங்கள் அன்புக்குரியவர்களுக்காக மட்டுமே வாழ்க்கை மதிப்புக்குரியது. உங்கள் பெரிய வீடு, ஆடம்பரங்கள், கார்கள், சொத்துக்கள் போன்றவை இறுதிவரை உங்களுடன் இருக்காது, உங்கள் அன்புக்குரியவர்கள் இருப்பார்கள்.


நினைவுகளில் மகிழ்ச்சி 


இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவை மட்டுமே உங்கள் நினைவில் நீங்காமல் இருக்கும். நினைவில் சேகரித்து வைத்திருக்கும் மகிழ்ச்சியும், அன்பும் உங்களை அழகாகவும், அன்பாகவும் வைத்திருக்கும். கடினமான காலங்களில் அவை உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் தருணங்களாக இருக்கும். 


மேலும் படிக்க | இந்த 5 காரணங்களால் பெண்களுக்கு ஆண்கள் மீது ஆர்வம் குறையலாம்!


கவலைப்படாதீர்கள்


மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கவலைப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதைப் புறக்கணிக்கிறார்கள். மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது. 


குடும்பத்திற்கு நேரம் கொடுங்கள்


வேலை மற்றும் தொழிலுக்குப் செல்வது ஒரு நல்ல விஷயம். ஆனால் உங்கள் அன்புக்குரியவர்கள் அதனைவிட முக்கியம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் பொன்னான நேரத்தை செலவிட வேண்டும். ஏனென்றால் அவ்வாறு செய்ய உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


விரும்பும் விஷயங்களை செய்யுங்கள்


வாழ்க்கை மிகவும் குறுகியது. நினைத்து பார்க்க கூட நேரமில்லாத நேரத்தில் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். அதனால், நீங்கள் விரும்பும் விஷயங்களை எப்போதும் செய்ய தவறிவிடாதீர்கள். 


மேலும் படிக்க | உடலுறவை விட ஆண்கள் அதிகம் விரும்பும் சீக்ரெட் விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ