ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
நாடு முழுவதும் எல்ஐசி ஐபிஓ விண்ணப்பப் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளன.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் (எல்ஐசி ஐபிஓ) மற்றொரு சாதனையைப் படைத்தது, அதன்படி நாட்டின் காப்பீட்டு நிறுவனமான பங்குக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5.9 மில்லியனைத் தாண்டியது. இந்தியாவின் மூலதனச் சந்தைகளுக்கான முந்தைய சாதனை ரிலையன்ஸ் பவர் 2008 ஐபிஓ 4.8 மில்லியன் விண்ணப்பங்களுடன் பட்டியலிடப்பட்டது. தற்போது இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் எல்ஐசியின் மெகா ஐபிஓவில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எல்ஐசி பாலிசிகளுடன் இணைக்கப்பட்ட பான்களின் மொத்த எண்ணிக்கை 42.6 மில்லியன் ஆகும்.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து பெரும்பாலான விண்ணப்பங்கள்
நாடு முழுவதும் விண்ணப்பித்ததில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. கடந்த ஆண்டு, க்ளென்மார்க் லைஃப் சயின்ஸின் ரூ.1,514 கோடி மதிப்பிலான ஐபிஓ 3.9 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றது, இது இந்திய வரலாற்றில் ரிலையன்ஸ் பவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சாதனையாகும்.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: அரசு தரப்பில் அனுப்பப்பட்ட உத்தரவு, விவரம் இதோ
எல்ஐசி ஐபிஓ இல் ஆர்வம் காட்டாத அனுபவ முதலீட்டாளர்கள்
எல்ஐசி ஐபிஓ பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே 7-ம் தேதி, 4.54 மணி வரையில் பாலிசிதாரர்கள், ஊழியர்களை தவிரப் பிற முதலீட்டாளர்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டாதது போலவே உள்ளது.
இதற்கிடையில் சில்லரை நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 6.90 கோடி பங்குகளுக்கு 10.99 கோடி விண்ணங்கள், அதாவது 1.59 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5.04 மடங்கும், எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் 3.79 மடங்கும் விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
மேலும் நிறுவனம் அதன் பங்குகளை ரூ.902-949 வரம்பில் விற்கிறது. அதன் பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடி வழங்கியுள்ளது. தகுதியான ஊழியர்கள் மற்றும் சில்லறை ஏலதாரர்கள் ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி பங்குகளை வாங்க இன்று கடைசி நாள்
எல்ஐசி நிறுவனத்தில் உள்ள பங்குகளில் 3.5 சதவீதத்தைப் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்து ரூ.21,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில் பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR