லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) நிறுவனம் தனது லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியினை வழங்கியுள்ளது.  அதாவது எல்ஐசி நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்காக வாட்ஸ் அப் மூலமாக சேவைகளை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது.  எல்ஐசியின் ஆன்லைன் போர்ட்டலில் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.  எல்ஐசி பாலிசிதாரர்கள் வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்தி பிரீமியம் விவரங்கள் போன்ற பல தகவல்களை பெறலாம்.  www.licindia.in என்கிற எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு எல்ஐசி நிறுவனம் கூறியுள்ளது.  உங்கள் பாலிசியை ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்த பிறகு, எல்ஐசி வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்த பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மாற்றம்: இனி லைசென்ஸ் பெறுவது கடினம்!



1) எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8976862090-ஐ உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.


2) இப்போது வாட்ஸ்அப்பைத் திறந்து, பின்னர் எல்ஐசி ஆஃப் இந்தியா வாட்ஸ்அப் சாட் பாக்ஸைத் தேடித் திறக்க வேண்டும்.


3) சாட் பாக்சில் 'ஹாய்' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.


4) உங்களுக்கு இப்போது 11 ஆப்ஷன்கள் வழங்கப்படும்.


5) உங்களுக்கு எந்த சேவை தேவையோ அதற்கான எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.


6) இப்போது எல்ஐசி உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் வாட்ஸ்அப் வாயிலாகவே அனுப்பும்.


வாட்ஸ்அப் மூலம் நீங்கள் பெறப்போகும் எல்ஐசி சேவைகள்:


1) செலுத்த வேண்டிய பிரீமியம்
2) போனஸ் இன்ஃபர்மேஷன் 
3) பாலிசி ஸ்டேட்டஸ் 
4) லோன் எலிஜிபிலிட்டி கொட்டேஷன் 
5) லோன் ரீபேமெண்ட் கொட்டேஷன் 
6) பிரீமியம் பெய்டு சர்டிஃபிகேட் 
7) பிரீமியம் பெய்டு சர்டிஃபிகேட் 
8) ULIP - ஸ்டேட்மென்ட் ஆஃப் யூனிட்ஸ் 
9) எல்ஐசி சேவை இணைப்புகள்
10) ஆப்ட் இன் / ஆப்ட் அவுட் சேவைகள்


எல்ஐசி ஆன்லைன் போர்ட்டலில் பாலிசியைப் பதிவு செய்வதற்கான செயல்முறை:


1) எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.inக்கு செல்ல வேண்டும்.


2) "வாடிக்கையாளர் போர்டல்" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


3) புதிய பயனராக இருந்தால், "புதிய பயனர்" என்பதைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.


4) பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


5) பயனர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைன் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.


6) "அடிப்படை சேவைகள்" என்பதன் கீழ் "கொள்கையைச் சேர்" என்பதைக் கிளிக் செய்யவும்.


7) இப்போது பதிவை முடிக்க உங்களின் அனைத்து விவரங்களையும் சேர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! பட்ஜெட்டில் காத்திருக்கும் 3 பரிசுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ