வாழ்க்கைப் பாடங்கள்: இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பது என்பது கூட குறைந்து விட்டது. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகலை தீர்க்க தேவையான ஆலோசனையையும் வழங்குபவர்கள் சிலர் தான் உள்ளனர். ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குவது என்பது மிகவும் நல்ல விஷயம். அது நிச்சயம் சிலரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து, நிம்மதியாகவும், வெற்றிகரமாகவும் வாழ்க்கை நடத்த உதவும். .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையில் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு தேவைப்படும்போது நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது நல்லது தான் என்றாலும்,  அறிவுரைகள், ஆலோசனைகள் கூறுவதில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் விருப்பப்படி மற்றவர்களுக்கு உதவுவது நல்லது, ஆனால் குறிப்பிட்ட அந்த 5 வகையான நபர்களுக்கு அறிவுரை வழங்குவது உங்களுக்கு பிரச்சனையை (Life Lessons) ஏற்படுத்தலாம்.


பேராசை பிடித்த நபர்


பேராசை கொண்ட ஒருவருக்கு நீங்கள் ஒருபோதும் அறிவுரை கூறக்கூடாது. அப்படிப்பட்டவர்கள், எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு முன்,  முதலில் தங்களுக்கு இதனால் கிடைக்கும் அதாயம் என்ன என்பதை அறிந்த பின்னரே மேற்கொள்வார்கள். அத்தகையவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், நேரம் வரும்போது, ​​​​இவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவற மாட்டார்கள்.


சந்தேக கண்ணோட்டம் கொண்ட நபர்


எதற்கெடுத்தாலும் மிகவும் சந்தேகம் கொள்ளும் சுபாவம் உள்ளவர் அல்லது மற்றவரை சந்தேகத்துடன் பார்க்கும் நபருக்கு நீங்கள் தவறுதலாக கூட அறிவுரை கூறக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் உங்கள் அறிவுரையை தவறாக எடுத்துக்கொண்டு உங்களை எதிரியாகக் கருதலாம் அல்லது உங்கள் அறிவுரையை சந்தேகத்துடன் பார்த்து உங்களை அவமதிக்கலாம். அதனால், இவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்


மேலும் படிக்க | துரித உணவை அதிகம் சாப்பிடும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி...!


கெட்ட சகவாசம் கொண்ட நபர்கள்


கெட்ட சகவாசம் கொண்ட நபருக்கு உங்கள் அறிவுரையை ஒருபோதும் வழங்கக்கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு உங்களின் அறிவுரை அவர்களுக்கு கோபத்தையே உண்டாக்கும். அதனால் பலன் ஏதும் இருக்காது. பல சமயங்களில், உங்கள் அறிவுரையால் எரிச்சலடைந்த இவர்கள், சமூகத்தின் முன் உங்களைத் தவறு என்று நிரூபிக்கவே முயல்வார்கள்.


அகம்பாவம் கொண்ட நபர்


சாணக்கிய நீதியின், அகம்பாவம், திமிர், தற்பெருமை நிறைந்த ஒருவருக்கு அறிவுரை கூறுவதை எப்போதும் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்கள் எப்போதும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள், ஏனென்றால் அவர்களால் நல்லது எது, கெட்டது எது என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு கஷ்டமான நேரங்களில் பிரச்சனைக்கு காரணமாகவும் ஆகலாம்.


தைரியம் இல்லாத நபர்


மன தைரியம் இல்லாதவரை எளிதில் எவரும் பயமுறுத்தி ஏமாற்றலாம். அத்தகைய நபர் கடினமான காலங்களில், அச்சத்தின் காரணமாக, நல்லது நினைத்து அறிவுறை கூறிய உங்களையே காட்டிக் கொடுக்கக் கூடும். இதன் காரணமாக நீங்களே சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அதனால், இவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ