Lifestyle News In Tamil: அதிகாலையில் எழுந்து படித்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம். காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லது என கூறப்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், காலையில் எழுந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அன்றைய முழு நாளையும் தீர்மானிக்கும் விஷயமாக அமைகிறது. சுறுசுறுப்பாக காலையை நீங்கள் தொடங்கினால், அன்றைய நாளும் சுறுசுறுப்பாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல்தான், காலையில் நீங்கள் உண்ணும் உணவும் அன்றைய நாளின் உங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடியதாக அமையும். அதனால்தான் காலை உணவை புறக்கணிப்பதால் உடல்நலக்குறைப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. சமமான ஊட்டச்சத்து கொண்ட உணவை நீங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும், உடனடியாக பசியெடுக்காது. எனவே, காலை உணவில் கூடுதல் சிரத்தையுடன் இருப்பதை உங்கள் வாழ்க்கைமுறையில் முக்கிய விஷயமாக பின்பற்றுங்கள். 


ஓட்ஸ் vs அவல்


அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளாக பார்க்கப்படும் ஓட்ஸ் மற்றும் அவல் ஆகியவற்றில் எதனை காலையில் சாப்பிட்டால் அதிக நன்மையை தரும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. நம் நாட்டில் அவலை சாப்பிடுவது ஒரு வழக்கமாக உள்ளது. அதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமிண்கள் நிறைந்திருக்கின்றன. அதேபோல் ஓட்ஸில் ஃபைபர் நிறைந்திருக்கிறது. இது உங்களை நாங்கள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இரண்டும் ஆரோக்கியமானது என்றால் எதில் அதிக நன்மை இருக்கிறது என்பதை இதில் காணலாம். 


மேலும் படிக்க | பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்! மீறி செய்தால் ஆபத்து..


அவலில் இருக்கும் நன்மைகள்  


முதலில் அவல் குறித்து பார்ப்போம். அரிசி தட்டையாக்கி அதனை இடித்து அவல் உருவாக்கப்படுகிறது. அவல் ருசியாக இருக்காது என்றாலும் உடலுக்கு அதிக சத்தானது. இதை சாப்பிடுவதால் வயிறு நிறைந்து காணப்படாது, ஆனால் பசியாறிவிடும். இதில் கலோரி என்பது மிக மிக குறைவும். உடல் எடையை குறைப்பவர்களுக்கு அவல் ஒரு வரப்பிரசாதம். 


அவலில் புரதமும் இருக்கிறது, இது எளிதில் செரிமானமும் ஆகிவிடும். நாள் முழுமைக்கும் உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தை மட்டுமின்றி உங்கள் செரிமான அமைப்பிலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கும். இருப்பினும், அவலில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது பெரியளவில் உடல் எடை குறைப்பில் பயன்தராது. அவலை காரமாகவும் உண்ணலாம். விரைவாகவும் நீங்கள் அவல் சார்ந்த உணவை செய்யவும் முடியும், உண்ணவும் முடியும். 


ஓட்ஸில் இருக்கும் நன்மைகள்


மறுபுறம் ஓட்ஸை பார்த்தோமானால், இதில் ஃபைபர் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலின் கொலஸ்ட்ராலை அளவையும் கட்டுப்படுத்தும், அதேபோல் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மையை தரும். அவலை விட இதில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் தசை வளர்ச்சி அதிகமாகும். உடலில் வலுவேற்ற வேண்டும் என்றால் ஓட்ஸ் சாப்பிடலாம். அதை போல் வயிறு நிறைந்துவிடும், பசியும் ஆறிவிடும், நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்திருக்கும். இதையும் நீங்கள் அவல் போல இனிப்பாகவும் சாப்பிடலாம், காரமாகவும் சாப்பிடலாம். சர்க்கரையை தவிர்ப்பதும் நல்லதுதான். 


அவல் மற்றும் ஓட்ஸ் இரண்டும் காலை உணவுக்கு கச்சிதமானது என்றாலும் ஓட்ஸில் இருக்கும் அதிக புரதம் கவனிக்க வேண்டியது. இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். எனினும் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். 


(பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ வல்லுநரை ஆலோசிக்கவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | தலையில் இரட்டை சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டியா? உண்மையான அர்த்தம் இதுதான்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ