தலையில் இரட்டை சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டியா? உண்மையான அர்த்தம் இதுதான்!

Two Swirls On Head Meaning : நம்மில் பலருக்கு, தலையில் ரெட்டை சுழி இருக்கும். இதைப்பார்க்கும் பலர் அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும் என்று கூறி கிண்டல் செய்வர். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 22, 2024, 06:11 PM IST
  • தலையில் இருக்கும் இரட்டை சுழி
  • இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?
  • இரண்டு திருமணம் நடக்குமா?
தலையில் இரட்டை சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டியா? உண்மையான அர்த்தம் இதுதான்! title=

Two Swirls On Head Meaning : உலகில் உள்ள அனைவருமே, தங்கள் அறிவிற்கு எட்டிய விஷயங்களையும் கூட மூடநம்பிக்கையாக மாற்றி அதை நம்ப ஆரம்பித்துவிடுவர். பூணை குறுக்கே சென்றால் அந்த காரியம் விளங்காது, போகும் போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் கெட்டு விடும் இப்படி எத்தனையோ மூட நம்பிக்கைகள் உலாவி வருகின்றன. அதில் ஒன்று, தலையில் இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்பதுதான். 

இரட்டை சுழியும் இரண்டு திருமணமும்..

இரட்டை சுழியானது, பெரும்பாலும் ஆண்களின் தலையில்தான் அதிகமாக இருக்கும். இதை யார் பார்த்தாலும் “இவன் ரெட்டை சுழி இருக்கறவன்டா..கண்டிப்பா ரெண்டு பொண்டாட்டிதான்” என்று கதைக்கட்ட ஆரம்பித்து விடுவர். இது போன்ற பேச்சுகள் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த ரெட்டை சுழி இருக்கும் நபர் மிகவும் பாவமானவராகவும், ஒரு மனைவியே அமையாதவராகவும் இருப்பார். அரிதானது:

அரிதானது:

தலையில் இரட்டை சுழி இருக்கும் நபர்களை, நாம் எங்காவதுதான் பார்க்க முடியும். பொதுவாக, அனைவருக்கும் இப்படி இருந்து விடாது. சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு ஆய்வின் படி, உலக மக்கள் தொகையிலேயே சுமார் 5 சதவிகிதம் பேருக்குதான் இந்த இரட்டை சுழியானது இருக்கிறதாம். 

அறிவியல் காரணம்:

அறிவியலின் ஆய்வு படி, ரெட்டை சுழி இருப்பது, மரபணு காரணமாக என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு குழந்தைக்கு ரெட்டை சுழி இருக்கிறது என்றால் அந்த குழந்தையின் தாத்தா-பாட்டி அல்லது முன்னோர்களுக்கு அப்படி இருந்திருக்கலாம். இதனால் அவர்களுக்கும் இது தொடர்ந்து வந்திருக்கலாம். 

மேலும் படிக்க | கனவுகளும் அர்த்தங்களும்: கனவில் பணம் வருவதற்கு இத்தனை அர்த்தம் இருக்கா..?

ஜோதிடம் சொல்வது என்ன?

ரெட்டை சுழி இருப்பவர்கள் குறித்து, ஜோதிடமும் ஒரு கூற்றை முன்னெடுத்து வைக்கிறது. இது போன்ற இரண்டு சுழிகள் இருப்பவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கலாம். அல்லது, ஒரு முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் இடையில் நின்று போய், இரண்டாவதாக வேறு வரன் அமைந்து அது திருமணத்தில் சென்று முடியலாம். பெரும்பாலான ரெட்டை சுழி வைத்திருப்பவர்களுக்கு இது போன்று நடந்ததால் இது பரவலாக நம்பப்படுகிறது. 

குணாதிசயம் எப்படி இருக்கும்?

ரெட்டை சுழி இருப்பவர்களின் குணாதிசயம் குறித்த ஒரு அதிசய உண்மையும் இருக்கிறதாம். இது போன்ற இரட்டை சுழி இருப்பவர்கள், எதையும் நேரடியாக பேசும் குணம் கொண்டவராக இருப்பார்களாம். மேலும், இவர்களிடம் பொறுமை குணமும் அன்பாக பழகக்கூடிய குணமும் அதிகமாக இருக்குமாம். தான் சிரமப்பட்டாலும் பிறருக்கு தன்னால் சிரமம் ஏற்படக்கூடாது என நினைக்கும் இவர்கள், பிறருக்கு ஒரு துன்பம் என்றால் உடனே கூடவே நிற்பார்களாம். தனக்கு என்ன சோகம் இருந்தாலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் நினைப்பார்களாம். 

இரட்டை சுழி இருப்பவர்களுக்கு, அது முடி இழப்பிற்கான அபாயமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தலையில் இருக்கும் மயிரிழைகள் மெலிதாக மாறுவதாலும் இது ஏற்படலாம் என இது குறித்து பேசும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை., இதில் எந்த தகவலுக்கும் ZEE MEDIA பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடலுறவு கொள்வது போல் கனவு வருகிறதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News