ரயில்களில் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட லக்கேஜ் அளவை விட அதிகமாக எடுத்து சென்றால் அபராதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூன் 6-ஆம் தேதி ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் லக்கேஜ்களை எடுத்துவந்தால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்திருந்தது. 


இந்நிலையில், நேற்று மீண்டும் ரயில் லக்கேஜ்களின் உச்சவரம்பை நிர்ணயம் செய்துள்ளது. அதல், முதல் ஏசி வகுப்பில் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்தாமல் 70 கிலோ லக்கேஜ்களையும், முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வோர் 50 கிலோ லக்கேஜ்களையும் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்.


மூன்றாம் வகுப்பு ஏசி, ஏசி CHAIR CAR, படுக்கை வசதி பிரிவு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள் 35 கிலோ லக்கேஜ்களை கட்டணம் செலுத்தாமல் எடுத்து செல்ல முடியும். இந்நிலையில் கட்டணம் செலுத்தி எடுத்து செல்லக்கூடிய லக்கேஜ்களுக்கும் ரயில்வே வாரியம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.


அதன்படி முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்வோர் 150 கிலோ லக்கேஜ்களையும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்வோர் 100 கிலோ லக்கேஜ்களையும் எடுத்து செல்ல முடியும். 3ம் வகுப்பு ஏசி மற்றும் ஏசி CHAIR CAR பெட்டியில் பயணம் செய்வோர் அதிகபட்சமாக 40 கிலோ லக்கேஜ்களையும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் செல்வோர் 80 கிலோ லக்கேஜ்களையும் எடுத்து செல்லலாம். 


இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வோர், அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.  உச்ச வரம்பையும் மீறி கூடுதலாக லக்கேஜ்களை எடுத்து செல்லும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.