Valentine’s Day 2021: காதலர் தினத்திற்கு இலவச விவாகரத்தை வழங்கும் தனியார் நிறுவனம்!
காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என சட்ட ஆலோசனை மையம் நூதன Offer-யை அறிவித்துள்ளது..!
காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என சட்ட ஆலோசனை மையம் நூதன Offer-யை அறிவித்துள்ளது..!
இன்றைய காலகட்டத்தில் காதலர் தினம் (Valentine’s Day) காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையே வணிகர்களுக்கு கொண்டாட்டம் தான். காதலர் தினத்தன்று காதலர்களை ஈர்ப்பதற்காக வணிகர்கள் பலர் தங்கள் நிறுவனத்தில் காதலர் தின சிறப்பு சலுகை, தள்ளுபடி, பரிசு (Gift) என வித விதமான Offer-களை அள்ளி குவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு சட்ட ஆலோசனை மையம் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு Offer-யை அறிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திருமணமான தம்பதிகளுக்கு இலவசமாக விவாகரத்து (free divorce) பெற்றுத்தரப்படும் என அறிவித்துளு்ளது.
இதற்காக விவாகரத்து பெற விரும்பும் தம்பதியினர் தங்களுக்குள் என்ன பிரச்னை ஏன் விவாரத்து வாங்க வேண்டும் என்பதை முதலில் ஒரு email-லில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு வரும் E-மெயில்களை ஆய்வு செய்து அதில் சரியான காரணங்களுக்காக பிரிய நினைக்கும் ஒரு தம்பதியை அந்த சட்ட ஆலோசனை மையம் (Law Firm) தேர்வு செய்யும், அவர்களக்கு இலவசமாக அந்த மையம் விவாகரத்து பெற்று தரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ALSO READ | Driving License: இங்கு பயிற்சி பெற்றால் ‘டெஸ்ட்’ இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்
இதற்கு எந்த விதமான மறைமுக கட்டணமும் கிடையாது, அதே நேரத்தில் கோர்ட் கட்டணமும் சட்ட ஆலோசனை மையம் மூலமாகவேகட்டப்படும். என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. காதலர் தினத்தன்று சிறப்பு சலுகையாக திருமணமான தம்பதிகளை பிரிக்கும் விதமாக சட்ட ஆலோசனை மையம் ஒன்று சலுகையை அறிவித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR