ஆயிசு நூறு வாழ ஆசையா? அப்போ உடனே இந்த 6 விஷயங்களை செய்யுங்கள்!
Longevity Tips Include These Healthy Habits: பலருக்கு தான் நூறாயிசு வரை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள், என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Longevity Tips Include These Healthy Habits: நம்மில் பலருக்கு நூறு ஆசை தாண்டி வாழ வேண்டும் என்று ஆசை இருக்கும். இதை நிறைவேற்றிக் கொள்ள சில பழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. அவை என்னென்ன தெரியுமா?
முழு மனதுடன் சாப்பிடுவது:
பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் அல்லது ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக டயட்டில் இருப்பர். ஒரு சிலர் என்ன காரணத்திற்காக டயட் இருக்கிறோம் என்பதை தெரியாமல் இருப்பர். இப்படி தினம் தோறும் உங்களால் டயட்டில் இருக்க முடியவில்லை என்றாலும் கூட, சாப்பிடும்போது முழு மனதுடன் சாப்பிட்டாலே போதும். சமீப காலமாக பலர் சாப்பிடும்போது மொபைல் பார்த்துக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருப்பர். இதனால் அவர்கள் உணவை சரியாக கவனம் கொடுத்து சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இனி சாப்பிடும் போது ஒவ்வொரு முறை வெல்லும் போதும் முழு மனதுடன் வெல்ல வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவு 80% மெல்லப்பட்டு வயிற்றுக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் செரிமானம் சரியாக நடைபெறும். ஜப்பானில் தான் அதிக ஆயுளுடன் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கின்றனர். அவர்கள் பின்பற்றும் பழக்கங்களுள் ஒன்று இது.
ஆக்டிவான வாழ்க்கை முறை:
அதிக ஆயுளுடன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிலர் வாழ்கின்றனர். இந்த பகுதியை blue zone என்று குறிப்பிடுவர். இந்த பகுதியில் வாழ்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் ஆக்டிவான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்களாம். அதிகமாக நடைபயிற்சி செய்வது, எப்படி ஏறுவது, தோட்டத்தை சுத்தப்படுத்துவது, விட்டு சுத்தப்படுத்துவது என எந்த வேலை செய்தாலும் அதனை உற்சாகமாக செய்கின்றனராம். இது பார்ப்பதற்கு பெரிதாக உடல் உழைப்பு இல்லாத வேலை போல தெரிந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறு பயிற்சி இது.
நண்பர்கள்-உறவினர்களுடன் கலந்துரையாடுவது:
தனிமையில் என்பது 15 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்ற சில கூற்றுகள் இணையத்தின் வேறு வைரல் ஆவதை பார்த்திருப்போம். இது உண்மையா இல்லையா என்று ஆராய்வதை விட்டுவிட்டு, தனிமை ஒருவரை வாட்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களை சிலர் சமூக மிருகங்கள் என்று கூறுவர். எனவே உங்களை மதிக்கும் உறவுகளை நீங்கள் மீண்டும் மதிப்பது மிகவும் நல்லது. அவர் செய்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூட அதிகரிக்குமாம். தனிமையில் இருந்து தப்பிக்க நண்பர்கள் உள்ள உறவினர்களுடன் நேரம் செலவிட்டு மகிழலாம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் செய்யும் குழுவில் இணைந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | அதிக நாட்கள் வாழ ஆசையா? அப்போ ‘இதை’ கண்டிப்பாக சாப்பிடவும்!
தாவர உணவுகள்:
உங்களுடைய தாவர காய்கறிகள் மற்றும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், பருப்பு வகைகள், கீரை வகைகள் உள்ளிட்டவற்றை சேர்ப்பதுடன், உலர் பழங்கள், நட்ஸ், நிறைய காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நம் உடன் ஆரோக்கியம் மேம்பட்டு நாள்பட்ட நோய் பாதிப்புகளில்இருந்து தப்பலாம்.
ஓய்வு:
இளமை காலத்தில் கூட பலர், ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதை தவிர்த்து, உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது சரியாக ஓய்வெடுக்க வேண்டும். தியானம் செய்வது, இயற்கையுடன் நேரம் செலவிடுவது, சரியாக உறங்குவது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | அதிக ஆயுள் வேண்டுமா? ‘இந்த’ 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ