PAN கார்டு தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்த படியே நொடியில் பெறலாம்!
உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். வீட்டில் உட்கார்ந்த படியே e-PAN கார்டை சில நிமிடங்களில் பெறலாம்.
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN Card) இன்று மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நிதிச் சேவைகளைப் பெறுவது முதல் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது வரை அனைத்திலும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பான் கார்டு இல்லாமல் நிதித்துறையில் முதலீடு செய்ய முடியாது. சில சமயங்களில் பான் கார்டு தொலைந்து விட்டால், மீண்டும் எப்படி பான் கார்டை பெறுவது? எங்கு செல்ல வேண்டும்? யாரிடம் பெற வேண்டும்? என்ற குழப்பம் இன்னும் பலருக்கு உள்ளது.
உங்களது பான் கார்டை தொலைந்து விட்டால், மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) கார்டை பதிவிறக்கம் செய்யலாம். இன்று பல நிதி நிறுவனங்கள் இ-பான் கார்டை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன.
e-PAN கார்டு என்றால் என்ன?
இ-பான் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பான் கார்டு (PAN CARD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் பான் கார்டின் மெய்நிகர் வடிவமாகும். பான் கார்டின் நகலைக் காட்டிலும் இது சிறந்தது. அதுமட்டுமில்லாமல் இ-பான் கார்டை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
ALSO READ | PAN CARD: இந்த தவறை செய்யாதீர்கள், ரூ. 10000 அபராதம் விதிக்கப்படும்
E-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
1. முதலில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் நுழையவும்.
பின்னர் e-PAN பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
2. உங்கள் தொலைந்த பான் கார்டு எண்ணை இங்கே உள்ளிடவும்.
3. அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
4. உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு, விதிமுறை மற்றும் நிபந்தனையை ஏற்கவும்.
5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிடவும்.
6. இதை உறுதி செய்த பின் பேமெண்ட் ஆப்ஷன் வரும். அதில் 8.26 ரூபாய் செலுத்த வேண்டும்.
7. பணம் செலுத்திய பிறகு நீங்கள் இ-பான் கார்டைப் பதிவிறக்கலாம்.
8. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய PDF கடவுச்சொல் தேவைப்படும்.
9. இந்த கடவுச்சொல் உங்கள் பிறந்த தேதியாக இருக்கும்.
10. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய நீங்கள் உங்கள் ஆதார் அட்டை (Aadhaar Card) மற்றும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும் அல்லது முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ALSO READ | ஆதார் அட்டையில் புகைப்படம் சரியாக இல்லை? இந்த வழியில் எளிதாக மாற்றலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR