How To Download Aadhaar Card | நாடு முழுவதும் அரசு சேவைகளுக்கு தேவையான முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த கார்டு இல்லையென்றால் பெரும்பாலான அரசு சேவைகளை பயன்படுத்த முடியாது. அதேநேரத்தில் இந்த கார்டு இருந்துவிட்டால் எல்லா சேவைகளையும் எளிதாக அணுகலாம். வங்கி சேவை முதல், பொது வருங்கால வைப்பு நிதி, பென்சன், பாஸ்போர்ட், அரசு மகளிர் உதவித் தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என எல்லாவற்றுக்கும் தேவைப்படும் ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. அப்படியான ஆதார் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவேளை உங்களிடம் இருந்த ஒரிஜினல் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?, மீண்டும் முறைப்படி ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அது வரும் வரை காத்திருப்பீர்களா?. அப்படி செய்ய தேவையில்லை. உடனடியாக ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்து கொள்ள முடியும். ஆதார் கார்டு சேதமடைந்தவர்களுக்கும் இந்த சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். அந்தவகையில் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் டூபிளிகேட் ஆதார் அட்டையை பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


ஆதார் கார்டு புகார் அளிக்க வேண்டும்


ஆதார் அட்டை தொலைந்துவிட்டால், முதலில் UIDAI உதவி எண்ணான 1947-ஐத் தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.  மேலும், help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் அனுப்பலாம்.  புகார் அளிக்காமல் விட்டால், உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பாக நேரிடும். இப்போதெல்லாம் பல சமூக விரோத செயல்களுக்கு பிறரின் அடையாள அட்டைகளையே ஆவணங்களாக சமூகவிரோதிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் புகார் அளிப்பதில் மட்டும் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.


டூபிளிகேட் ஆதார் அட்டை பெறுவது எப்படி?


டூபிளிகேட் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்.  "Retrieve Lost UID/EID" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும்.  பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.  OTP சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் ஆதார் எண் மொபைல் எண்ணில் காண்பிக்கப்படும்.  அதன் மூலம், நகல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.


ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.  அதேபோல், தொலைந்துவிட்டால் உடனடியாக புகார் அளித்து, நகல் அட்டைக்கு விண்ணப்பிப்பதன் மூலம், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கலாம்.  UIDAI அவ்வப்போது ஆதார் தொடர்பான புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.  அவற்றையும் அவ்வப்போது தெரிந்து கொள்வது நல்லது.


நகல் ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


- முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
- "Retrieve Lost UID/EID" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும்.
- பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற தேவையான தகவல்களை உள்ளிடவும்.
- பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு, முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற கூடுதல் தகவல்களை உள்ளிடவும்.
- "Send OTP" என்பதைக் கிளிக் செய்து, OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- OTP சரிபார்ப்புக்குப் பிறகு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- OTP சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் ஆதார் எண் மொபைல் எண்ணில் காண்பிக்கப்படும். அதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.
- ஆதார் அட்டை எண் மற்றும் பதிவு ஐடியின் உதவியுடன் UIDAI போர்டலில் இருந்து நகல் ஆதார் அட்டையைப் பெற முடியும்.


மேலும் படிக்க | அவசரமாக ரூ.2 லட்சம் கடன் வேண்டுமா... ஆதார் அட்டை போதும் - எப்படி வாங்குவது?


மேலும் படிக்க | UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்ப கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ