எந்தெந்த ராசிகளுக்கு இன்று காதல் மலரும்..? இன்றைய காதல் ராசிப்பலன்கள் இதோ..!
Love Horoscope Today 21st July 2023: அன்புக்குரியவரின் காதல் இன்று உங்களை எட்டுமா..? நீங்கள் பேச நினைத்த நபர் இன்று உங்களிடம் வந்து பேசுவாரா..? உங்களுக்கான இன்றைய காதல் ராசி பலன்கள்..இதோ.
இன்று உங்கள் அதிர்ஷ்டம் உங்கள் காதல் வாழ்க்கையில் எந்த வகையில் உதவப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா..? உங்கள் காதல் கேள்விகளுக்கான பதில்கள் ராசிபலன் வாயிலாக இங்கு இருக்கின்றன. அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்: உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் உங்கள் நேரத்தைக் செலவு செய்வீர்கள். உங்கள் உறவுகள் வலுவான நம்பிக்கையுடன் செழிக்கும். இன்று முழுவதும் நீங்களும் உங்கள் காதல் வாழ்க்கையும் உங்கள் கண்ட்ரோலில்தான் இருப்பீர்கள். காதல் உறவுக்கு இன்று ஒரு புது அர்த்தம் உருவாகும் அன்புக்குரியவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு உதவ முற்படுவீர்கள். உங்கள் சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவுகள் இனிமையாக இருக்கும். நல்ல விஷயங்களில் இன்று கவனம் செலுத்துவீர்கள். அன்புக்குரியோரிடம் இருக்கும் நம்பிக்கை வளரும்.
ரிஷபம்: இன்று உங்கள் காதல் வாழ்வில் சில கடினமான சூழ்நிலைகள் உருவாகலாம். உங்களுக்கான நேரம் வரும் போது இயல்பாக செயல்படுங்கள். உங்கள் குடும்பத்தை ஒற்றுமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகள் முரண்பட்ட விளைவை ஏற்படுத்தும். பிறரிடம் அடக்கத்தையும் பணிவையும் காண்பியுங்கள்.
மிதுனம்: உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் மீது பெரிதும் நம்பிக்கை வைப்பார்கள். உறவுகள் இணக்கமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அன்புக்குரியவரிடம் இன்று கண்ணியமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வின் தரம் உயரும். என்றுமில்லாமல் இன்று பிறரிடம் இறக்கம் காண்பிப்பீர்கள்.
கடகம்: அனைவரிடத்திலும் இன்று மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் வலுவான பந்தத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள். உங்கள் அன்புக்குரியவரும் நீங்களும் ஒன்றாக மதிப்புமிக்க நேரத்தை செலவிடுவீர்கள். இன்று நீங்கள் உங்களது உணர்ச்சிகள் குறித்து நேர்மையான கருத்துகளை கூறுவீர்கள், இதனால் காதல் வாழ்வில் சிக்கல் ஏற்படாது. உங்கள் காதலி அல்லது காதல் உடனான தொடர்பு ஆழமடையும். அவர்கள் வாழ்வில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை பரந்த கண்ணொட்டத்துடன் சிந்தித்து தீர்வு காணுங்கள்.
சிம்மம்: உங்களால் முடிந்தவரை உங்கள் அன்புக்குரியவர் மீது எவ்வளவு காதலை காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காட்டுவீர்கள். உங்களை சந்திக்கையில் உங்கல் காதலி-காதலன் மகிழ்ச்சி கொள்வார். காதலில் அடுத்த படிக்கு செல்ல சந்தர்ப்பம் உண்டாகலாம். அன்புக்குரியவர், கடினமான நேரத்தில் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்.
கன்னி: அலுவலகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் பிறரிடம் இன்று கனிவாக நடந்து கொள்ளுங்கள். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களுடைய தனிப்பட்ட காதல் விஷயத்தை பிறரிடம் பகிர வேண்டாம். இன்று உங்கள் அன்புக்குரியோருடன் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துலாம்: நீங்கள் பேசும்போது, தெளிவான கருத்துகளை முன் நிறுத்துவீர்கள். பழைய காதல் நினைவுகள் உண்டாகலாம், அது உங்களின் தற்போதைய வாழ்வை கெடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடம் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கலாம். அதை பயன்படுத்திக்கொள்வீர்கள்.
விருச்சிகம்: தேவையில்லாத சண்டையினால் காதல் வாழ்வில் சண்டை உண்டாகலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் காதலன்-காதலியிடம் நியாயமான உணர்வுகளுடன் பேசுவீர்கள்.
தனுசு: சண்டையின் போது கூட நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கவலைகள் மேம்படும், நேசிப்பவர்கள் உங்கள் வார்த்தையை நம்புவார்கள். மறந்து போன உறவுகள் மீண்டும் வரலாம். உறவுகளுக்குள் நல்லிணக்கம் ஏற்படும்.
மகரம்: மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுகையில் தெளிவாக இருங்கள். காதல் விஷயத்தில் பொறுமையை கடைப்பிடியுங்கள். அறிவார்ந்தவர்களிடம் சிறந்த விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். நம்பிக்கை மற்றும் தைரியம் மேம்படும், சிறுசிறு விஷயங்கள் அல்லது சண்டைகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்.
கும்பம்: உங்கள் அன்புக்குரியவருடன் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள். காதலன்-காதலியின் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வீர்கள். காதல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
மீனம்: உணர்ச்சிபூர்வமான விஷயங்களை கையாளும் போது கவனமும் பொறுமையும் தேவை. எதை பேசினாலும், பார்த்து பேசவும். முக்கியமான முடிவுகளை எடுக்கையில், மனம் சொல்வதை கேட்டு செயல்படுங்கள். காதல் உறவில் நம்பிக்கை மேம்படு. இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு தெளிவு பிறக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ