Love Horoscope: ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ஒரே காதல் மழைதான்..! இன்றைய காதல் ராசி பலன்கள் இதோ..!

Love Horoscope July 20 2023: காதலன் அல்லது காதலியின் பதிலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறீர்களா..? உங்கள் க்ரஷ் உங்களை திரும்பி பார்க்க போகிறாரா..? உங்கள் காதல் வாழ்க்கை இன்று எப்படி இருக்கப்போகிறது..? இன்றைய காதல் ராசிப்பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 20, 2023, 08:27 AM IST
  • இன்று சில ராசிக்காரர்களுக்கு காதல் மழை பெய்ய இருக்கிறது.
  • சிலர் காதல் தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்வார்கள்.
  • எந்தெந்த ராசிக்கு எந்த வகையான காதல் பலன்கள் உள்ளன..?
Love Horoscope: ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ஒரே காதல் மழைதான்..! இன்றைய காதல் ராசி பலன்கள் இதோ..! title=

16ஸ் தொடங்கி 60ஸ் வரை பலருக்கும் காதல் என்றாலே மனதிற்குள் பரபர பட்டாம்பூச்சிதான்.  சிலர், தங்கள் காதலை அன்புக்குரியவரிடம் வெளிப்படுத்திவிட்டு பதிலுக்காக காத்துக்கொண்டிருப்பீர்கள், சிலர் உங்கள் க்ரஷ் உங்களை திரும்பி பார்ப்பாரா என ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பீர்கள். இன்று உங்கள் காதல் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? வறண்ட நிலத்தில் எப்போதாவது பெய்யு மழை போல உங்கள் காதல் வாழ்வில் ஏதேனும் மேஜிக் நடக்குமா? இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

மேஷம்: 

இன்று நீங்கள் உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதைக்கேட்டு நடப்பீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். காதல் சம்பந்தப்பட்ட உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். காதலில் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு சூழ்நிலைகளை கையாளுவீர்கள். என்ன நினைக்கிறீர்களோ அதை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிப்பீர்கள். அன்பு மற்றும் பாசம் தொடர்பான விஷயங்கள் உங்களை தேடி வரும் காதல் விஷயத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மொத்தத்தில் உங்கள் காட்டில் மகிழ்ச்சி மழைக்கு பஞ்சமில்லை. 

மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் கண்டிப்பாக ஒத்து வராது..!

ரிஷபம்:

உங்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவீர்கள். உங்களைச்சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் மரியாதை கொடுப்பீர்கள். இன்றைய நாள், உங்களை பணிகளை செய்களையில் பணிவையும் விவேகத்தையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னருடன் பரஸ்பர நம்பிக்கையைப் பேணுவீர்கள். அன்புக்குரியவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பீர்கள். அனைவருக்கும் கொடுங்கள். தனிப்பட்ட விஷயங்களில் பொறுமையைக் காட்டுங்கள். அவசரப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். உங்கள் அன்புக்குரியவர்கள் கூறும் விஷயங்களை காது கொடுத்து கேளுங்கள். 

மிதுனம்:

அன்பு, பாசம் போன்ற விஷயங்களினால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று காதல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டாயம் வரலாம். அன்புக்குரியவரின் ஆதரவையும் நம்பிக்கையையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் உள்ள பந்தத்தை வலுப்படுத்துவீர்கள். உறவுகள் வலுவாக இருக்கும். உணர்ச்சிகளை சமநிலையாக கையாளவும். பல விஷயங்களை பேசி தீர்க்கும் நாள் இது. உங்கள் மகிழ்ச்சியை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.

கடகம்: 

குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். அன்பானவர்களின் சகவாசத்தை தக்கவைத்து கொள்வீர்கள். உங்களுக்கு ஏற்ற ஒரு வாய்ப்பு இன்று உங்களை தேடி வரும். வீட்டில் கொண்டாடும் வகையில் ஒரு செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவரிடம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். 

சிம்மம்:

மனதில் நெருடலாக இருந்த ஒரு விஷயம் இன்று உங்களை விட்டு அகலும். இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். தனிப்பட்ட வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியோருக்கு மரியாதை கொடுப்பீர்கள். நீண்ட நாட்களாக பேச நினைத்த விஷயத்தை உங்கள் அன்புக்குரியவரிடம் பேசுவீர்கள். உங்கள் மீது ஒருவருக்கு ஈர்ப்பு உண்டாகலாம். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வீர்கள். மனதளவில் உயர்ந்த மனிதராக நடந்து கொள்வீர்கள். 

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்..! யார் அந்த தங்கமான ராசி உடையோர்?

கன்னி:

எந்த விஷயத்தையும் அவசர அவசரமாக பேசுவதை தவிர்க்கவும். எல்லா இடங்களிலும் பணிவாக நடந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தி கொள்ளுங்கள். யார் உங்களை திரும்பி பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர் இன்று உங்களை நீங்கள் பார்க்காத போது பார்ப்பார். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம். அன்புக்குரியோருக்காக சில ஸ்பெஷலான விஷயங்களை செய்வீர்கள். 

துலாம்:

நண்பர்களின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் தேடியது உங்கள் கைக்கு வந்து சேரும். காதல் உறவுகளில் முன்னேற்றம் காணப்படும். அன்புக்குரியோருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கலைக்கட்டும். நம்பிக்கை மற்றும் அன்பு அதிகரிக்கும். 

விருச்சிகம்:

உங்களைத்தேடி மகிழ்ச்சியான தருணங்கள் வந்து சேரும். உங்களை தேடி ஒரு இன்பமான செய்தி வந்து கொண்டிருக்கிறது. காதல் துளிர்க்க வாய்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சம உரிமை-சம மரியாதையோடு உங்கள் அன்புக்குரியவரிடம் நடந்து கொள்வீர்கள். காதலர், காதலியிடம் பேசும் போது நீங்கள் நீங்களாக இருப்பது முக்கியம். 

தனுசு:

உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வலிமை இருக்கும். உணர்வுபூர்வமான விஷயங்கள் மேம்படும். காதல் உறவுகள் ஆழமடையும். அறிவில் முதிர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு காதல் உறவுகள் ஆரம்பமாகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் உணர்வுகளை அன்புக்குரியவரிடம் வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் இயல்பான உறவைப் பேணுவீர்கள். நட்பு பலம் பெறும். அன்புக்குரியவரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மகரம்:

உங்கள் மீது உரிமை இருப்போருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். புத்திசாலித்தனத்துடன் காதல் விஷயங்களில்  செயல்படுவீர்கள். விவாதங்களின் போது கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களுடன் ஒன்றாக நேரம் செலவிடுவீர்கள். தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பான ஒரு முக்கியமான தகவல் உங்களை வந்து சேரலாம். பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவும். அன்புக்குரியவர்களைச் சந்திக்கும்போது பொறுமையை கடைப்பிடியுங்கள். 

கும்பம்: 

மகிழ்ச்சியான உறவால் உங்களுக்கு பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். அன்புக்குரியவரிடம் ஒன்றாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். காதல், க்ரஷ் உறவிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். அன்புக்குரியவர்களால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். காதலால் உங்கள் மனம் திருப்தியாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரம் ஒதுக்குவீர்கள். காதலில் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவீர்கள். அவ்வப்போது சிறு சிறு விவாதங்ளும் மோதல்களும் அன்புக்குரியவருடன் ஏற்படலாம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

மீனம்:

அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். வாக்குறுதிகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்கள் நண்பர்கள் ஆதரவு கரம் நீட்டுவர். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவசரப்படுவதைத் தவிர்க்கவும். பிடிவாதத்திலிருந்து விலகி இருங்கள். காதல் உறவுகளிலை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவர்களை முக்கியமான விஷயத்தை எடுப்பதற்கு முன்பு கேளுங்கள். அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படுவீர்கள். விவாதங்களில் குதித்து சண்டையாக மாறிய பிறகு, முடிவெடுப்பதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News