புதுடெல்லி: இந்தியன் ஆயில் (IOCL) தனது வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு கடந்த சில மாதங்களில் 4 சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகள் சமையலறை பணிகளை எளிதாக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் இண்டேனின் வாடிக்கையாளராக இருந்தால், இவற்றை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியன் ஆயில் இது குறித்த தகவல்களை ட்வீட் மூலம் அளித்துள்ளது. எந்தெந்த வசதிகளின் மூலம் பயன் கிடைக்கும் என இங்கே காணலாம்: 


IOCL ட்வீட் செய்தது:
Indian oil இது குறித்து ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு 4 புதிய சேவைகளைத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வசதிகளை மனதில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன.
-  இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ்
- மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவை
- 5 கிலோ எடை கொண்ட சின்ன சிலிண்டர்
- காம்போ சிலிண்டர்களாக 14.4 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களையும் பெற்றுக்கொள்ளலாம்.



ALSO READ: இலகு ரக Smart LPG சிலிண்டரை அறிமுகம் செய்தது IOCL: இதன் சிறப்புகள், நன்மைகள் இதோ


இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ்
வாடிக்கையாளர்களுக்கு இப்போது இண்டேன் (Indane) எக்ஸ்ட்ரா தேஜ் சிலிண்டர் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிலிண்டர் அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜியின் உயர் தரத்தை வழங்கும். இது விரைவான சமையலுக்கு உதவும். மேலும் இதன் மூலம் சமயலுக்கான நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் உணவின் தரமும் சிறப்பாக இருக்கும்.


மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவை
IOCL கொரோனா நெருக்கடியில், வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் சேவையைத் துவக்கியது. இதன் மூலம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எந்த செலவும் இல்லாமல் மிஸ்ட் கால் மூலம் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். இந்த வசதி ஐ.வி.ஆர்.எஸ் அமைப்பு வசதிபடாதவர்களுக்கும் முதியவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.


எல்பிஜி (LPG) வாடிக்கையாளர்கள் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து சிலிண்டரை புக் செய்யலாம். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்ய ஆகும் நேரத்தை மிச்சப்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் இந்த அழைப்புக்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.


காம்போ சிலிண்டர்
இது தவிர, நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு காம்போ சிலிண்டர்களையும் வழங்கியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்கள் 14.4 கிலோ சிலிண்டருடன் 14.4 கிலோ சிலிண்டரையும் பெற்றுக்கொள்ளலாம். 


5 கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டர்
இது தவிர, சமையல் எரிவாயு அதிகம் தேவைப்படாதவர்களுக்காகவும், குடும்பத்தை விட்டு வெளியே தனியாக வசிக்கும் நபர்களுக்காகவும் 5 கிலோ குட்டி சிலிண்டர் (Chotu Cylinder) தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5 கிலோ சிலிண்டரை இண்டேனின் ஏஜென்சி அல்லது நிறுவனத்தின் பெட்ரோல் பம்பிலிருந்து வாங்கலாம்.


ALSO READ: Big News! LPG சிலிண்டர் விலையில் இன்று முதல் பெறும் நிவாரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR